400 விநாடிகள் ப்ளான்! அயர்ன் டோம் எல்லாம் ஒன்னுமே இல்லை! இஸ்ரேலை வீழ்த்த ஈரான் போட்ட திட்டம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: தங்கள் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது ஈரான். நேற்றிரவு இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் முக்கிய ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்த ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் நேற்று தாக்குதலை தொடுத்திருக்கிறது.

This is Iran s plan to defeat Israel in 400 seconds

ஈரான் சொல்வது என்ன?: "எங்கள் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் முக்கிய ராணுவ தலைவர்களை இழந்திருக்கிறோம். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டியது எங்களது கடமை. மட்டுமல்லாது பதிலடி கொடுப்பது என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமானதுதான். சட்டப்பூர்வ பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. சாசனத்தின் 51வது பிரிவு இதை உறுதி செய்கிறது" என்று ஈரான் ராணுவம் கூறியுள்ளது. படை பலத்திலும் இஸ்ரேலை காட்டிலும், ஈரான்தான் சக்திவாய்ந்தது என்பதால் தற்போது மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக இந்த தாக்குதல் அமைந்திருக்கிறது.

இஸ்ரேல் நிலை: தாக்குதல் குறித்து ஏற்கெனவே இஸ்ரேல் எதிர்பார்த்திருந்தது. ஆனால், இஸ்ரேல் வசம் ஐயன் டோம் எனும் பாதுகாப்பு அமைப்பு இருப்பதால் பயம் இல்லாமல் இருந்தது. தற்போது ஐயன் டோம்-ல் பயன்படுத்தப்படும் Thamira Missile ஏறத்தாழ காலியாகும் நிலைக்கு சென்றிருக்கிறது. எனவே, நேற்றிரவு இஸ்ரேல் முழுவதும் இடைவிடாமல் சைரன் சத்தம் ஒலிக்க தொடங்கியுள்ளது. மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளைவிட்டு திறந்தவெளி பகுதியில் குடியேறியுள்ளனர். குறிப்பாக தெற்கு இஸ்ரேலில் உள்ள அனைவரும் Bomb Shelter-க்குள் செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஈரானின் திட்டம்: ஏற்கெனவே ஹமாஸ் அமைப்பு ஏராளமான ராக்கெட்களை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால், இஸ்ரேலின் ஐயன் டோம் அமைப்பை இந்த ராக்கெட்டுகளால் தாண்ட முடியவில்லை. எனவே இந்த அமைப்பை வீழ்த்த ஈரான் புது கணக்கை வைத்து நேற்றிரவு செயல்பட்டிருக்கிறது. அதாவது ஈரானின் திட்டத்தின்படி, முதலில் 150 ட்ரோன்கள், இரண்டாவதாக 200 ட்ரோன்கள், மூன்றாவதாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவப்பட்டிருக்கிறது.

ட்ரோன்கள் ஒவ்வொன்றும், மணிக்கு 210 கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஈரானிலிருந்து ஆக்கிரமிப்பு பாலஸ்தீன் 2000 கி.மீ தொலைவில் இருக்கிறது. அப்படியெனில் ட்ரோன்கள் அங்கு செல்ல குறைந்தது 8-9 மணி நேரம் ஆகலாம். அது வந்ததும் அதனோடு இஸ்ரேல் பாதுகாப்பு அம்சமான ஐயன் டோம் பிஸியாகிவிடும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஈரானுக்கு 400 விநாடிகள் கிடைக்கும். இதனை பயன்படுத்தி டெல் அவிவ்-வை நோக்கி ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஈரான் வீசும். இதனை ஐயன் டோம்களால் மட்டுமல்ல, எந்த வான் பாதுகாப்பு சாதனங்களாலும் தடுக்க முடியாது. இதனால் இஸ்ரேல் கலக்கமடைந்திருக்கிறது.

சர்வதேச நாடுகள்: ஈரானின் இந்த தாக்குதலுக்கு பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேபேல இஸ்ரேலுக்கு பக்கத்தில் உள்ள சைப்ரஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர் விமானங்களை இஸ்ரேலின் உதவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமெரிக்காவும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு கூடுதல் ஐயன் டோம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. ஈரானின் தாக்குதல் மூன்றாம் உலகப்போரின் தொடக்கம் என பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+