எப்படி ஒளிர்கிறது பாருங்கள்... அடித்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் எல்லை
நாசா: நாசா ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நாசா விண்வெளி வீரர் எடுத்த படம் இது. இதில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் பளிச்சென ஒளிர்கிறது.
இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையிலான எல்லைக் கோட்டுப் பகுதியை இரவில் படம் எடுத்துள்ளது நாசா. அதில் இரு நாட்டு சர்வதேச எல்லைப் பகுதியும் வெளிச்சத்தில் ஒளிர்வதாக உள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்தபடி அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவர் இதை எடுத்துள்ளார்.

ஒளிக்கோடு...
நீண்டு நெடிந்து காணப்படும் சர்வதேச எல்லைப் பகுதி இதில் வெளிச்சமாக ஒளிர்கிறது. இந்து நதியோரமாக வெளிச்சக் கோடு நீண்டு காணப்படுகிறது. இரு நாட்டு எல்லையையும் அது படம் பிடித்துக் காட்டியுள்ளது.
சிறிய ஆரஞ்சு விளக்குகள்...
இரவு நேரத்தில் விண்வெளியிலிருந்து பார்க்கக் கூடிய ஒரு சில நாட்டு எல்லைகளில் இந்தியா, பாகிஸ்தான் எல்லையும் ஒன்றாகும். இரு நாட்டு எல்லைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ஆரஞ்சு விளக்குகள்தான் இப்படி அழகுற காட்சி தருகின்றன.
வெளிச்சப்புள்ளி...
இதில் கராச்சி நகரம் வெளிச்சப் புள்ளியாக தெரிவதைக் காண முடிகிறது. இதுதான் பாகிஸ்தானின் துறைமுக நகராகும். இந்தியாவின் வடக்கில் இமயமலைத் தொடரையும் காண முடிகிறது.
டிஜிட்டல் கேமரா...
செப்டம்பர் 23ம் தேதி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிக்கான் டி4 டிஜிட்டல் கேமராவை வைத்து இதைப் படம் பிடித்துள்ளனர். இந்த கேமராவில் 28 மில்லி மீட்டர் லென்ஸ் உள்ளது.

லைக்ஸ்...
நாசாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இது பதிவிடப்பட்டுள்ளது. இதை இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 15,000 முறைக்கும் மேலாக இது ஷேர் செய்யப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications