அமெரிக்கர்கள் யூஜின் ஃபாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், ராபர்ட் ஷில்லருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்

Subscribe to Oneindia Tamil

Three Americans win Economics Nobel
ஸ்டாக்ஹோம்: 2013ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கர்களான யூஜின் எஃப் ஃபாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென் மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை துவங்கி ஒவ்வொரு துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசு அமெரிக்கர்களான யூஜின் எஃப் ஃபாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென் மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. சொத்து விலைகள் குறித்த அவர்களின் ஆய்வுக்காக அவர்களுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பரிசை ஸ்வீடனைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆல்பிரட் நோபல் 1895ம் ஆண்டு உருவாக்கினார். ஆனால் நோபலை கௌரவிக்கும் வகையில் 1968ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை ஸ்வீடனைச் சேர்ந்த சென்ட்ரல் வங்கி உருவாக்கியது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் பகிர்ந்து கொள்வது இது 6வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+