ஒபாமாவின் அனைவருக்கும் கம்ப்யூட்டர் திட்டம்: கோடி, கோடியாய் கொடுக்கும் இன்ஃபி, டிசிஎஸ், விப்ரோ
வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் கம்ப்யூட்டர் கல்வி பயிற்சி அளிக்கும் அதிபர் ஒபாமாவின் திட்டத்திற்கு இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆதரவு அளிக்க முன் வந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் கம்ப்யூட்டர் பயில வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். இருப்பினும் அனைத்து குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டர் கல்வி கிடைப்பது இல்லை.

இந்நிலையில் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். அனைவருக்கும் கம்ப்யூட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை செய்லபடுத்த 4 பில்லியன் டாலர் செலவாகும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி, வகுப்பறைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை அனைவருக்கும் கம்ப்யூட்டர் திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். கம்ப்யூட்டரை பயன்படுத்த தெரிந்தால் மட்டும் போதாது மாறாக குழந்தைகளுக்கு கோடிங் உள்ளிட்ட வேலைக்கு செல்லும்போது தேவைப்படும் திறன்களும் இருக்க வேண்டும். அதற்காகவே இந்த திட்டம் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்போசிஸ், டி.சி.எஸ். மற்றும் விப்ரோ ஆகிய இந்திய ஐடி நிறுவனங்கள் ஒபாமாவின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளன. அனைவருக்கும் கம்ப்யூட்டர் திட்டத்திற்கு இன்போசிஸ் 1 மில்லியன் டாலர் நன்கொடை அளிக்கிறது. டிசிஎஸ் அமெரிக்காவின் 27 நகரங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உறுதியளித்துள்ளது.
விப்ரோ மிஷிகன் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க 2.8 மில்லியன் டாலர் செலவு செய்வதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications