லேசர் தொழில்நுட்பத்தில் புதிய சாதனை.. 3 பேருக்கு நோபல் பரிசு

2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் இணைந்து இந்த பரிசைப் பெறுகின்றனர்.

இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் நேற்றில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது.

நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

மூன்று பேர்

மூன்று பேர்

கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சின் ஜெரார்ட் மெளரு, கனடாவின் டோனோ ஸ்டிக்லேன்ட் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லேசர் துறையில் நிகழ்த்திய புதிய கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது.

 அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின்

அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின்

அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின் ''ஆப்டிகல் டிவீசர்ஸ்'' எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்காக நோபல் பெறுகிறார். பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 50 சதவிகிதத்தை இவர் பெறுவார்.

 பிரான்ஸின் ஜெரார்ட் மெளரு

பிரான்ஸின் ஜெரார்ட் மெளரு

பிரான்ஸின் ஜெரார்ட் மெளரு, அதே லேசர் துறையில் அதிக திறன் கொண்ட மிக மெல்லிய லேசர் அதிர்வுகளை உருவாக்கிய காரணத்திற்காக நோபல் பெறுகிறார். இவர் பரிசுத் தொகையில் 25 சதவிகிதத்தை பெறுவார்.

கனடாவின் டோனோ

கனடாவின் டோனோவும் இதே லேசர் தொழில்நுட்பத்திற்காகத்தான் விருது பெறுகிறார். அதி நுண்ணிய லேசர் அதிர்வுகளை எப்படி இயக்க வேண்டும் என்று வழிகளை உருவாக்கியதற்காக பரிசு பெறுகிறார். இவரும் இந்த 6.5 கோடி ரூபாயில் 25 சதவிகிதத்தை பெறுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+