விளையாட்டு வினையானது... நிஜதுப்பாக்கியால் தாயை சுட்டுக் கொன்ற 3 வயது சிறுவன்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் விளையாட்டுத் துப்பாக்கி என நினைத்து நிஜ துப்பாக்கியால் தாயை 3 வயது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒஹ்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரை சேர்ந்த ராணுவ அதிகாரி கிறிஸ்டா ஏஞ்சல்ஸ் (26). இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று தனது மகளுக்கு டயாபர் மாற்றிக் கொண்டிருந்தார் ஏஞ்சல்ஸ். அப்போது அங்கே வந்த அவரது 3 வயது மகன், தனது கையில் வைத்திருந்த நிஜ துப்பாக்கியால் விளையாட்டுத்தனமாக தாயாரின் தலையில் சுட்டுள்ளான்.
இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஏஞ்சல்ஸ் உயிரிழந்தார். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது, ஏஞ்சல்ஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், நடந்த விபரீதம் அறியாமல் அச்சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தார் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக அமெரிக்காவில் இது போன்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications