யு.ஏ.இ.: உம் அல் குவைனில் புதிய மருத்துவ நிலையம் திறப்பு விழா
உம் அல் குவைன்: உம் அல் குவைனில் தம்பே கிளினிக் என்ற புதிய மருத்துவ நிலைய திறப்பு விழா 23.07.2015 அன்று நடைபெற்றது. தம்பே குழுமத்தின் நிறுவன தலைவர் தம்பே முகைதீன், கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழக தலைமை நிர்வாகி பேராசிரியர் கீதா அசோக் ராஜ், இயக்குநர் அக்பர் முகைதீன் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த மருத்துவ நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் விஷன் 2020 திட்டத்தின் கீழ் மேலும் 15 புதிய மருத்துவ நிலையங்கள் திறக்கப்பட இருப்பதாக தம்பே முகைதீன் தெரிவித்தார். இந்த மருத்துவ நிலையங்கள் நவீன மருத்துவ உபகரணங்களுடன் இருக்கும் என இயக்குநர் அக்பர் முகைதீன் தெரிவித்தார்.

தம்பே மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்கள் அனைத்தும் கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும்.

இந்த மருத்துவ நிலையத்தில் முதல் மூன்று வாரங்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மருத்துவ சோதனைகளுக்கு சலுகை கட்டணமும் வழங்கப்படும். முக்கிய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கார்டுகளும் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த மருத்துவ நிலையத்தின் அருகில் தம்பே பார்மஸியும் திறந்து வைக்கப்பட்டது.

இதுபோன்ற மருத்துவ நிலையங்கள் துபாய், ராசல் கைமா மற்றும் சார்ஜா ஆகிய பகுதிகளிலும் விரைவில் திறக்கப்படும். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications