For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தியான்மென் நியாபகம் இருக்கா! பீரங்கிக்கு முன் தனி ஆளாக நின்ற உக்ரைன் இளைஞர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி சென்ற படைகளை இளைஞர் ஒருவர் தனி ஆளாக வழி மறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் 1989ல் நடைபெற்ற தியான்மென் போராட்டங்கள் பலருக்கு தெரிந்து இருக்கும். அங்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஹு யாப்பொங் மரணம், அதற்கு முந்தைய பொருளாதார மாற்றங்கள், அரசின் கட்டுப்பாடுகள் என்று பலவற்றை எதிர்த்து மாணவ, மாணவியர் நடத்திய போராட்டம்தான் தியான்மென் போராட்டம்.

இந்த போராட்டத்தில் கடைசியில் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பலர் பலியானார்கள். இந்த தியான்மென் போராட்டம், தியான்மென் சதுக்க படுகொலைகள் உலகம் முழுக்க பிரபலம்.

தனித்து விடப்பட்ட உக்ரைன்.. ராணுவத்தை அனுப்பாமல்.. டாலர்களில் உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா! தனித்து விடப்பட்ட உக்ரைன்.. ராணுவத்தை அனுப்பாமல்.. டாலர்களில் உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா!

போராட்டம்

போராட்டம்

இந்த போராட்டத்தின் போது தியான்மென் சதுக்கம் நோக்கி சென்ற பீரங்கிகளை இளைஞர் ஒருவர் தனி ஆளாக எதிர்ப்பார். பீரங்கிகள் வரிசையாக வரும் போது இளைஞர் ஒருவர் ஒற்றை ஆளாக அந்த பீரங்கிகளின் கான்வாய் முன் சென்று நின்று போராட்டம் செய்வார். இதனால் பீரங்கிகள் மேற்கொண்டு நகர முடியாமல் அங்கேயே நிற்கும். இந்த புகைப்படம் தியான்மென் போராட்டத்தின் அடையாளமாக மாறியது. இவரை டேங்க் மேன் என்று உலக நாடுகள் அழைப்பதும் குறிப்பிடத்தக்கது.

தியான்மென்

தியான்மென்

இந்த நிலையில்தான் தியான்மென் சதுக்கத்தில் நடந்தது போலவே உக்ரைன் நாட்டு ராணுவத்தின் பீரங்கிகளை ஒரு இளைஞர் எதிர்த்து இருக்கிறார். உக்ரைன் நாட்டிற்குள் தற்போது ரஷ்யாவின் போர் படைகள் புகுந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்கு ரஷ்யா கடுமையான வான்வெளி, ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏவுகணைகள், பீரங்கிகள், குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது.

உக்ரைன்

உக்ரைன்

உக்ரைனின் தலைநகர் கீவ் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீவை நோக்கி ஏகப்பட்ட பீரங்கிகள் இன்று காலையில் இருந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி சென்ற படைகளை இளைஞர் ஒருவர் தனி ஆளாக வழி மறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் ஒருவர் பீரங்கிகளின் கான்வாய் முன் துணிச்சலாக நின்று உள்ளார்.

அதே சம்பவம்

அதே சம்பவம்

இவர் இப்படி வந்து நின்றதும்... அடுத்து நடந்த சம்பவம்தான் கவனத்தை ஈர்த்து உள்ளது. முதலில் வந்த பீரங்கி முன் இவர் நின்றது அந்த பீரங்கி வழியை மாற்றிக்கொண்டு வேறு பக்கமாக சென்றது. அடுத்த பீரங்கியையும் இதேபோல் இவர் தடுக்க முயன்றார். அந்த பீரங்கியும் வழியை மாற்றிக்கொள்ள முயன்ற போது, இவரும் இடது வலமாக நகர்ந்து அந்த பீரங்கியை தடுக்க முயன்றார். நடுரோட்டில் அந்த பீரங்கியோடு கபடி ஆடுவது போல இவர் ஆடிக்கொண்டுஇருந்தார்.

வீடியோக்கள் டிரெண்ட்

வீடியோக்கள் டிரெண்ட்

கடைசியில் அவரிடம் இருந்து தப்பித்து ஒருவழியாக அந்த பீரங்கி தாண்டி சென்றது. ஆனால் தொடர்ந்து விடமால் அந்த இளைஞர் அடுத்தடுத்து வந்த பீரங்கிகளை தடுத்தார். ஆனால் அதில் இருந்து ராணுவத்தினர் அந்த இளைஞரை எதுவும் செய்யவில்லை. மாறாக அவரிடம் மோதலுக்கு செல்லாமல் அங்கிருந்து தப்பித்து வெளியேறினர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

English summary
Tiananmen Square tank man returns: An Ukraine man steps in front of Russian convoy on its way to the capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X