ஸ்பேஸ் வாக்கில் அசத்திய வீராங்கனை.. விண்வெளியில் நடந்த முதல் சீன பெண்.. ரெடியாகும் ஸ்பேஸ் ஸ்டேஷன்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்; சீன விண்வெளி வீராங்கனை வாங் யாப்பிங்கும் நேற்று ஸ்பேஸ் வாக் செய்தார். இதன் மூலம் சீனாவிற்காக ஸ்பேஸ் வாக் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

விண்வெளியில் சீனா தற்போது ஆராய்ச்சி மையம் ஒன்றை கட்டி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகிவிடும்.

இந்த நிலையில் சீனா தங்களுக்கு என்று தனியாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கட்டி வருகிறது. சீனா கட்டிவரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு டியாங்யாங் விண்வெளி ஆராய்ச்சி மையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சீனா

சீனா

சர்வதேச விண்வெளி மையத்திற்குள் சீனாவை அமெரிக்கா அனுமதிக்காத நிலையில் சீனா தனது விண்வெளி ஆய்வு மையத்தை கட்டி வருகிறது. பூமியில் இருந்து 425 கிமீ உயரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இதன் நீளம் 20 மீட்டர் ஆகும். இதன் முழு கட்டுமானம் இன்னும் முடியவில்லை. இதற்காக சீனா தொடர்ந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பல்வேறு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஸ்பேஸ்

ஸ்பேஸ்

ஷென்ஷோவ் 13 மிஷனின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை சீனா இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக அனுப்பி உள்ளது. முன்னதாக ஷென்ஷோவ் 12 மிஷன் மூலம் 3 விண்வெளி வீரர்கள் டியாங்யாங் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக விண்வெளிக்கு சென்றுவிட்டு 3 மாதம் இருந்துவிட்டு திரும்பினார்கள். இந்த நிலையில் ஷென்ஷோவ் 13 மிஷன் மூலம் மேலும் 3 விண்வெளி வீரர்கள் டியாங்யாங் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

6 மாதம்

6 மாதம்

இவர்கள் 6 மாதம் விண்வெளியில் இருப்பார்கள். ஷாய் ஷியாங், வாங் யாப்பிங், யே குவாங்பு ஆகியோர் விண்வெளிக்கு சென்றுள்ளனர். இவர்கள் 6 மாத கால ஆராய்ச்சியில் மொத்தமாக 6 மணி நேரம் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்ய உள்ளனர். நேற்று முதல் கட்டமாக சில நிமிடங்கள் இவர்கள் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்தனர். ஸ்பேஸ் ஸ்டேஷனின் வெளிப்புற கட்டமைப்பை மேற்கொள்வதற்காக இவர்கள் ஸ்பேஸ் வாக் செய்தனர்.

Recommended Video

    அணு ஆயுத முப்படைகளை கட்டமைக்கும் China.. America வெளியிட்ட பகீர் அறிக்கை
     ஸ்பேஸ் வாக்

    ஸ்பேஸ் வாக்

    சீன விண்வெளி வீராங்கனை வாங் யாப்பிங்கும் இதில் ஸ்பேஸ் வாக் செய்தார். இதன் மூலம் சீனாவிற்காக ஸ்பேஸ் வாக் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை புரிந்துள்ளார். சீன வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை ஆகும். 12 நிமிடங்கள் இவர் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்துள்ளார். வரும் நாட்களும் மேலும் ஸ்பேஸ் வாக் செய்ய உள்ளார்.

    எப்போது முடியும்

    எப்போது முடியும்

    கடந்த ஏப்ரல் 29ம் தேதிதான் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தின் கோர் மாடலை சீனா விண்ணிற்கு ஏவியது. விரைவில் இதன் கட்டுமானம் முடிய உள்ளது. சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் செயல் இழந்த பின், செயல்பாட்டில் உள்ள ஒரே ஸ்பேஸ் ஸ்டேஷனாக டியாங்யாங் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+