துபாயில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ரியால்ட்டி மற்றும் கல்வி கண்காட்சி
துபாய்: துபாயில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்தும் ரியால்ட்டி எக்ஸ்போ மற்றும் கல்விக் கண்காட்சி நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் நடத்தும் மிகப்பெரிய ரியால்ட்டி ஷோவான ரியால்ட்டி இந்தியா எக்ஸ்போ 2013 வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் துபாயில் உள்ள கிரவுன் பிளாசாவில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூர், அகமதாபாத், சன்டிகர், கோவை, டெல்லி, குர்காவ்ன், கோவா, நொய்டா, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, மைசூர், ஊட்டி, புனே உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் இருந்து ரியல் எஸ்டேட் தொழில் புரிவோர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 050- 1240912/ 056- 9847741 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
மேலும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்தும் கல்வி கண்காட்சியும் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் கிரவுன் பிளாசாவில் நடைபெறுகிறது. இந்தியாவில் படிக்க நல்ல பல்கலைக்கழகங்களை தேர்வு செய்ய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும். அனுமதி இலவசம். இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 050- 9431529 / 056- 3946342 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications