ராமர் பட்டாபிஷேக ஓவியம், திப்பு சுல்தான் வாள் உட்பட 90 அரியபொருட்கள் லண்டனில் 9ம் தேதி ஏலம்
லண்டன்: ராமரின் பட்டாபிஷேக ஓவியம், திப்பு சுல்தானின் வாள் உட்பட இந்தியாவின் தொன்மையாக பொக்கிஷப் பொருட்கள் லண்டனில் வரும் 9ம் தேதி ஏலம் விடப்பட இருக்கிறது.
தொடர்ந்து பல அரிய தொன்மையான இந்தியப் பொருட்கள் லண்டனில் ஏலம் விடப் பட்டு வருகின்றது. அந்தவகையில், தற்போது ராமரின் பட்டாபிஷேக ஓவியம் உள்ளிட்ட 90 தொன்மையான பொருட்களை ஏலம் விட லண்டன் ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதிக விலைக்கு அப்பொருட்கள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவற்றின் விவரங்களாவன....

ஆர்ட் ஆப் இம்பீரியல் இந்தியா....
லண்டனில் உள்ள சாத்பை ஏல நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ள இந்த ஏலத்திற்கு, ‘ஆர்ட் ஆப் இம்பீரியல் இந்தியா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பட்டாபிஷேக ஓவியம்...
ராமரின் பட்டாபிஷேகத்தை குறிக்கும் ஓவியத்தை கடவுள்களும், தேவர்களும் பங்கேற்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. எனவே, இந்த ஓவியம் சுமார் 1 கோடி ரூபாயில் இருந்து 1.5 கோடி ரூபாய் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்வாள்....
அதேபோல், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் போர்வாள் 80 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரையிலும் ஏலம் போகும் என நம்பப் படுகிறது.

வைரங்கள், தங்க கலசம்.....
மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய வைரங்கள், தங்க தாம்பாளம்(டிரே), தங்க கலசம் போன்றவையும் இந்த ஏலத்தில் பங்கெடுக்க உள்ளது. அவை, சுமார் 2 கோடி முதல் 3 கோடி வரையிலும் ஏலம் எடுக்கப் படும் என ஏல நிறுவனர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குத்துவாள்....
17ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க முலாம் பூச்சுடன் மரகதம் மற்றும் செம்பு கற்கள் பொறிக்கப்பட்ட குத்துவாள் 80 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரையிலும் விலை போகலாம் என கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications