உங்க பசங்க பேஸ்புக்ல இருக்காங்களா.. ரொம்பக் கவனமா இருக்கணும் பாஸ் நீங்க!
ஒட்டாவா: நாளொன்றிற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடுவது, குழந்தைகளின் மனநலத்துக்கு கேடு விளைவிக்கும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடப்பது பொதுவாகவே மூளைக்கு கேடு எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கனடாவில் உள்ள ஒட்டாவா பொது சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஹியூக் சம்பாசா கன்யிங்கா மற்றும் ரொசாமண்ட் லூயிஸ் என்ற ஆராய்ச்சியாலர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அவர்களது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாவது:-

மன நல பாதிப்புகள்
சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஒரு நாளைக்கு குழந்தைகள் 2 மணி நேரத்துக்கு அதிகமாகச் செலவிட்டால் அவர்களுக்கு பல்வேறு கையான மன நல பாதிப்புகள், ஏன் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது உள்ளிட்ட பல பாதிப்புகள் உண்டாகும்.

ஒப்பீடு...
குழந்தைகள் இத்தகைய வலை தளங்களில் அவர்கள் செலவிடும் நேரத்தையும், அவர்களின் மன நலத்தையும் ஒப்பீடு செய்து பார்த்த போது இந்த முடிவு கிடைக்கப் பெற்றது.

25 சதவீத குழந்தைகள்...
7 வயது முதல் 12 வயது வரை உள்ள சுமார் 25 சதவீத குழந்தைகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாக சமூக வலை தளங்களில் தங்களின் நேரத்தைச் செலவிடுகிறார்கள். எனினும், சிலருக்கு இதே சமூக வலைதளங் கள் பிரச்சினையாக இருக்கும் போது, வேறு சிலருக்கு தீர்வாகவும் இருக்கின்றன.

புதிய திட்டங்கள்...
குழந்தைகளில் பலர் இந்த சமூகவலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், அதே வலைதளங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை மையப்படுத்திய திட்டங்களைக் கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரை...
இந்த ஆய்வுக் கட்டுரை ‘சைபர் சைக்காலஜி, பிஹேவியர் அண்ட் சோஷியல் நெட்வொர்க் கிங்' எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications