கொல்லப்பட்ட 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள்.. போரில் ஓங்கும் உக்ரைன் கை.. என்ன நடந்தது? டாப் 10 தகவல்கள்!
மாஸ்கோ: உக்ரைன் போரில் இதுவரை 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலியாகி இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் தொட்டுள்ளது. உக்ரைனின் கீவ், கார்கிவ் பகுதிகளை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது.
இந்த போரில் இதுவரை ரஷ்ய தரைப்படைகள், ரஷ்ய ஏவுகணைகள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பெரிய அளவில் தன்னுடைய விமானப்படையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர் குறித்த டாப் 10 தகவல்கள் பின்வருமாறு

போர் மக்கள் மரணம்
1. இந்த போரில் உக்ரைன் மக்கள் பலியாகவில்லை என்று உக்ரைன் கூறி வருகிறது. ஆனால் ஐநா தகவலின்படி உக்ரைன் மக்கள் அதிக அளவில் பலியாகி இருக்கலாம். 10 ஆயிரங்களுக்கும் அதிகமாக உக்ரைன் மக்கள் பலியாகி இருக்கலாம் என்று ஐநா தெரிவித்துள்ளது. அதோடு 1.5 மில்லியன் மக்கள் இடமாறிவிட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
2.உக்ரைனில் இருக்கும் ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி மருத்துவமனைகளும் தாக்கப்பட்டு வருகிறது. இது போர் விதிமீறல் ஆகும். இது போர் குற்றத்தில் சேரும். இன்று ரஷ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற போர் குற்ற விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

போர் வீரர்கள் மரணம்
3. இந்த போரில் இதுவரை ரஷ்ய வீரர்கள் 11000 பேர் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.46 விமானங்களை ரஷ்ய படைகள் இழந்துள்ளது. 68 ஹெலிகாப்டர்களை ரஷ்ய படைகள் போரில் இழந்துள்ளது. 999 வாகனங்கள், பீரங்கிகளை ரஷ்யா இழந்துள்ளது, என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 10 நாட்களில் இவ்வளவு செய்துள்ளோம். வரும் நாட்களில் இன்னும் அதிகமாக செய்வோம் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
4.உக்ரைனில் Starokostiantyniv என்ற ராணுவ தளவாடத்தை ரஷ்யா தாக்கி அளித்துள்ளது. இது விமானப்படைக்கு சொந்தமான தளம் ஆகும். தொடக்கத்தில் இருந்தே உக்ரைன் விமான படையை குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடும் தாக்குதல்
5. மரியபோல் பகுதியில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இங்கு நீர் மற்றும் மின்சார பிரச்சனை உள்ளது. அதேபோல் இங்கு போர் நிறுத்தத்திற்கு இடையிலும் ரஷ்ய படைகள் தாக்கி வருவதால் தொடர்ந்து மீட்பு பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
6. உக்ரைன் போரில் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களை ரஷ்யா குறி வைத்து தாக்கி வருவதாக யு.கே தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்ய படைகள் மெதுவாக நகர்ந்து சென்றாலும் அதிக அளவு சேதங்களை இதனால் ஏற்படுவதுவதாக யு.கே உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் உச்சம்
7. உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ள நிலையில் ஜி 7 நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை கோட்னு வர போவதாகவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. அலிகார்க்ஸை குறி வைத்து இந்த பொருளாதார தடைகளை கொண்டு வர போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. ஜெர்மன் - ரஷ்யா இடையிலான நட்பு இதனால் மொத்தமாக முறிந்துள்ளது.
8. உக்ரைன் போர் நடக்கும் நிலையில் இன்றுதான் பிரதமர் மோடி ரஷ்ய அதிபருடன் பேசினார். அவரை தொடர்ந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி உரையாடினார். போர் மற்றும் இந்திய மாணவர்கள் மீட்பு குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர்.

ரஷ்ய படைகள் தாக்குதல்
9. ரஷிய படையின் மெயின் போர்ஸ் எனப்படும் மத்திய படை இன்னும் தலைநகர் கீவ் வெளியே நிற்கிறது.அங்கு 60 கிமீ தூரத்திற்கு இந்த படைகள் பெரிய தாக்குதல் நடத்தாமல் பீரங்கிகளை நிறுத்தி வைத்துள்ளது.
10. உக்ரைன் போரை உடனே கைவிட வேண்டும். ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்க வேண்டும். இல்லையென்றால் உக்ரைன் என்ற நாட்டிற்கு உள்ள தனி நாடு அங்கீகாரத்தை அந்த நாடு இழக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications