அமெரிக்க விமானத் தாக்குதலில் அல் கொய்தாவின் முக்கியத் தலைவர் சனாபி அல் நாசர் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அல்கொய்தாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சனாபி அல் நாசர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.
சிரியாவில் 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அதிபர் ஆசாத்தின் குடும்பத்தினரே ஆட்சியில் இருந்து வருகின்றனர். அங்கு அதிபர் ஆசாத்துக்கு எதிராக சிரியா ஆர்மி என்ற கிளர்ச்சிக் குழு அமெரிக்காவின் ஆயுத உதவியுடன் உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இக்குழு அல்லாமல் அல் நூஸ்ரா என்ற அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவின் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

துருக்கி எல்லையில் சிரியா குர்துகளும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. அதே நேரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சனாபி அல் நாசர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
தற்போது கொல்லப்பட்டுள்ள சனாபியின் உண்மையான பெயர் அப்துல் மோசென் அப்துல்லா இப்ராஹிம் அல் சரேக் ஆகும். சிரியாவிற்கு இடம் பெயர்ந்த அல்கொய்தா தலைவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். வடமேற்கு சிரியாவில் கடந்த வியாழனன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஆவார். அல் கொய்தாவின் கொரசான் பிரிவின் முக்கியத் தலைவராக இருந்து வந்தவர். இந்த கொரசாவன் பிரிவினர் சிரியாவில் இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கொல்லப்பட்டுள்ள சனாபி, கொரசான் பிரிவின் முதன்மை பொருளாளராகவும் இருந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் அல்கொய்தா இயக்கத்தின் ஐந்து முக்கியத் தலைவர்களை அமெரிக்கப் படைகள் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications