பெற்றோரின் கவனக்குறைவு... ஆன்லைனில் ஆபாசப்படம் பார்க்கும் 2வயது குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் படி இரண்டு வயது குழந்தைகள் கூட பெற்றோரின் நடவடிக்கைகளால் இணையத்தில் ஆபாச படம் பார்க்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த நடிகை அமண்டா செய்பிரிடு தனது 6 வயதில் ஆபாச படங்களை பார்த்ததாக தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது அதனை உறுதி செய்வதைப் போல பிரிட்டன் வாழ் குழந்தைகள் மற்றும் இளைய சமூதாயத்தினரை ஆன்லைனில் உள்ள ஆபாச வீடியோ மற்றும் படக்காட்சிகள் வன்முறை மற்றும் பாலியல் வன்முறை செயல்களுக்கு தூண்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் படி, பிரிட்டனில் உள்ள 30 லட்சம் குடும்பங்களில் வாழும் குழந்தைகள் ஆன் லைனில் ஆபாச படம் பார்ப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் 5 ல் 2 பங்கு குடுமபத்தினர் இதை கண்டறிந்து இதை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாம்.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆன் லைன் நிபுணர் மேரி லூயிஸ் அப்ரிட்டி கூறுகையில்...

அதிர்ச்சித் தகவல்....

எங்களது ஆய்வாளர்கள் திரட்டிய தகவலில் இளம் வயதில் ஆன் லைனில் ஆபாச உள்ளடக்கங்களை தேடும் குழந்தைகளின் விகிதம் கவலை அடையச்செய்து உள்ளது.

குழந்தைகளின் கையில் இணையம்...

தற்போது குழந்தைகள் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்களை மட்டும் பயன்படுத்துவது இல்லை. கையடக்க சிறிய சாதனங்களான ,டேப்லட்ஸ், ஸ்மார்ட்போன்கள், டேப்ஸ், என பல்வேறு வகையான சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இதில் அனைத்திலும் இணையதள இணைப்பு உள்ளது.

கண்டிப்பான பெற்றோர்...

சில கண்டிப்பான பெற்றோர்கள் அவர்களுக்கு கொடுக்கபடும் சாதனங்களை கண்காணிக்கின்றனர்.

போராடும் பெற்றோர்...

சர்வேயில் சில பெற்றோர்கள் வளர்ந்து வரும் இணைய தொழில்நுட்பத்தை சமாளிக்க வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மோர்ட்போன் இணைப்புகளில் ஆபாச உள்ளடக்கததை வடிகட்ட போராடி வருகின்றனர்.

ஆபத்தான சுதந்திரம்...

மூன்றில் இரண்டு பங்கு குடும்பத்தினர் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்களில் எந்த வித கட்டுப்பாடும் தெரிவிப்பது இல்லை.

கட்டுப்பாடு தேவை...

குழந்தைகளுக்கு உரிய ஸ்மார்ட் போன்களில் வரும் ஆபாச விஷயங்களை எளிதில் கட்டுப்படுத்த முடியும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உண்மைச் சம்பவம்....

கடந்த மாதம் இணையத்தில் பலான படத்தைப் பார்த்து தனது தங்கையைப் பாலியல் பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன் கைது செய்யப் பட்டதை குறிப்பிட்ட அப்ரிடி, ‘இது போன்ற ஆபாஷ தளங்களை சிறுவர்கள் நெருங்காவண்ணம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் வயது விஷயத்தில் கண்டிப்பு காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+