Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'வெல்கம் டூ ஆஸ்திரேலியா'.. கொஞ்சம் கூட பயம் இல்லை.. சின்ன சலனம் இல்லை.. மிரள வைத்த பெண்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் வீட்டின் மேற்கூரை ஓட்டையில் இருந்து இரண்டு ராட்சத பாம்புகளை ஒரு பெண் வெளியே எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் இளம் பெண் எந்த பயமும் இல்லாமல் பாம்புகளை வெளியே அசால்ட்டாக இழுத்து போடுகிறார்.

இந்த உலகத்தில் பாம்புகள் கொடிய விஷம் கொண்ட உயிரினங்களில் ஒன்று. அதேநேரம் எல்லா பாம்புகளுமே விஷம் கொண்டவை அல்ல. இதை சரியாக புரியாமல் பாம்பை கண்டு பயப்படுவதும், மிரளுவதும். அடிப்பதும் நடக்கிறது. பாம்புகள் என்றாலே பயம் தானாக வந்துவிடுவதால் அந்த வீடியோக்ககளுக்கு சமூக வலைதளங்களில் தனி மவுசு உண்டு.

Trending Video : Australian Woman Pulls Out 2 Giant Snakes From Ceiling, Interesting reaction from netizens

பாம்புகள் பொதுவாக மனிதர்களை தேடிபோய் தாக்காது. தனது இறையை மட்டும் தான் தேடி பிடித்து சாப்பிடும்.. மற்ற நேரங்களில் சாதுவாக சென்றுவிடும். ஆனால் பாம்புகளை நாம் மிதித்துவிட்டாலோ, அதன் வழியில் நாம் மட்டுமே தனியாக இருந்து, அதனை நாம் அச்சுறுத்துகிறோம் என்று பயந்தால் தான் நம்மை தாக்கும்.

அதேநேரம் பாம்புகள் வேட்டையாடும் போது இறைகளை வித்தியாசமான முறையில் தத்திரங்களை உபயோகித்து வேட்டையாடும். இறைகளை பிடிப்பதில் தந்திரமான விலங்குகளில் முதன்மையானது பாம்பு தான்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தனது வீட்டின் மேல்சுவற்றின் ஓட்டையில் இருந்து இரண்டு ராட்சத பாம்புகளை வெளியே இழுக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் எந்த பாதுகாப்பும் கவசமும் அந்த பெண் அணிந்திருக்கவில்லை. எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சர்வ சாதாரணமாக தனது கைகளால் பாம்புகளை பிடித்து இழுக்கிறார். இந்த பாம்பு வீடியோ இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்த இளம் பெண், வீட்டிற்குள் மேசை மீது ஏறி நிற்கிறார். வீட்டின் மேற்கூறையில் உள்ள பாம்புகளை அகற்ற ஒரு குச்சியை பயன்படுத்துகிறார். அடுத்த சில நொடிகளில், பாம்பு ஒன்று கீழே இறங்கத் தொடங்குகிறது, அதன்பின் அந்த பெண்ணின் கையை அந்த பாம்பு சுற்றிக் கொள்கிறது. அதன்பிறகு அடுத்ததாக கான்ங்ரீட் மேற்கூரையில் இருந்து பெரிய பாம்பை அந்த பெண் பிடிக்கிறார். அந்த பாம்பும் அவரது கையை சுற்றிக்கொள்கிறது.இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால் எந்த பாம்புமே அவரை கடிக்கவில்லை. அத்துடன் பாம்பை பிடிக்கும் போது அந்த பெண் எந்த சலனமும் இல்லை. மிக அமைதியாக ஒரு குழந்தையை தூக்குவது போல் பாம்பை இழுக்கிறார்.

இந்த வீடியோவை நாதன் ஸ்டாஃபோர்ட் என்ற இன்ஸ்டாவாசி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை இதுவரை ஐந்து மில்லியன் பேர் பார்த்துள்ளனர். சுமார் 70 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணின் செயலை பாராட்டினாலும், அந்த பாம்பை ஆஸ்திரேலிய பெண் குடும்ப செல்லப்பிராணிகளைப் போல வளர்ப்பது தெரிகிறது என்றார்.

இன்னொருவர் இந்த பாம்புகளால் தான், ஆஸ்திரேலியாவில் வசிக்காமல் இருக்கிறேன் என்றார். மூன்றாவது நெட்டிசனோ, அதெப்படிம்மா கொஞ்சம்கொட பயப்படாம செய்யுற என்று கேட்டுள்ளார். "ஆஸ்திரேலியர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள்," என்று மற்றொரு நெட்டிசனும் கூறியுள்ளார். அந்த பெண் என்னை விட தைரியமானவள், இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை" என்று ஒருவரும் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, மலேசியாவில் ஒரு குடும்பத்தின் கான்ங்ரீட் மேற் கூரையிலிருந்து மூன்று ராட்சத பாம்புகள் கீழே விழுந்த காட்சிகள் வெளியாகி இருந்தது.. பாம்பு பிடிப்பவர் கூரையில் இருந்து ராட்சத பாம்பை அகற்ற கம்பியைப் பயன்படுத்தி குத்தினார். மற்றொருவர் பாம்பை வெளியே ஊக்குவிக்கும் முயற்சியில் ஒரு கம்பை எடுத்து முட்டிக் கொண்டிருந்தார். அப்போது மொத்தமாக 3 பாம்புகள் பொத்தென்று தரையில் விழுந்தன. இந்த காட்சி பார்ப்போரை அதர வைத்தது. அதேபோன்று தான் ஆஸ்திரேலிய பெண் வெளியிட்ட வீடியோவிலும் பாம்புகள் வந்ததால் பலரும் ஆச்சர்யத்துடன் பாம்புகளை பார்த்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+