Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹர்தீப் சிங் கொலை.. இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.. பின்வாங்கிய கனடா பிரதமர் ட்ரூடோ

Subscribe to Oneindia Tamil

டொரான்டோ: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பைக் கிளப்பி இருந்தார். இதற்கிடையே இப்போது திடீரென இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது மட்டுமே என்றும் ஆதாரம் இல்லை என்று சொல்லி பேக் அடித்துள்ளார்.

இந்தியர்கள் அதிகம் இருக்கும் வெளிநாடுகளில் ஒன்று கனடா.. அதேநேரம் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தையும் ஆதரிக்கும் பலரும் கூட அங்கு உள்ளனர். நமது இந்தியாவைப் போல காலிஸ்தான் இயக்கங்களுக்கு அங்குத் தடை இல்லை என்பதே இதற்குக் காரணமாகும்.

canada justin trudeau

அப்படி கனடாவில் இயங்கி வந்த காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்த நபர் கடந்தாண்டு அவரது இல்லத்தில் வைத்து யாரோ சிலர் சுட்டுக் கொன்றனர்.

கனடா குற்றச்சாட்டு: இந்த படுகொலை சம்பவத்திற்கு இந்தியா காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபர குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது சர்வதேச அளவில் பரபரப்பானது. மேலும், இந்தியா கனடா இடையேயான உறவும் மிகக் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்தியா ஆதாரம் கேட்டது. இருப்பினும், ஆதாரம் வழங்க மறுத்த கனடா, தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மட்டுமே சொல்லி வந்தது.

இந்தச் சூழலில் பல மாதங்களுக்குப் பிறகு, இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு தங்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று கனடா கூறியிருக்கிறது. கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்குத் தனது அரசு வெறும் தகவலை மட்டுமே பகிர்ந்து கொண்டதாகவும் ஆதாரம் எதுவும் இல்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை ஒப்புக்கொண்டார்.

ட்ரூடோ: வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்து விசாரிக்கும் முகமை நடத்தி வரும் விசாரணையில் ஆஜரான ட்ரூடோ இந்த கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், ஹர்தீப் சிங் கொலையில் குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன்பே இந்தியாவுடன் ஆலோசனைகளை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் இல்லை: இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு இந்தியாவிடம் கேட்ட போது அவர்கள் ஆதாரம் கேட்டதாகவும் ட்ரூடோ தெரிவித்தார். இருப்பினும், அந்த நேரத்தில் தகவல் மட்டுமே இருந்தது இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2023 செப்டம்பரில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்தும் கனடா பிரதமர் விளக்கினார். அவர் அப்போது கூறுகையில், "நான் அவரிடம் சொன்னேன்.. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்றேன். இந்த விவகாரத்தில் எங்கள் கவலையைப் பகிர்ந்து கொண்டேன். அவர் வழக்கம் போலவே பதிலளித்தார். ஹர்தீப் கொலையில், இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. கனடா இறையாண்மையை இந்தியா மீறி இருக்கிறது என்பதே உண்மை" என்றார்.

மூவர் கைது: முன்னதாக ஹர்தீப் சிங் கொலை தொடர்பாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா நாட்டு போலீசார், கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங், (28) ஆகிய மூன்று பேரைக் கைது செய்திருந்தனர். அவர்கள் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+