காலிஸ்தான் பிரிவினைவாதிக்காக.. இந்தியாவை பகைப்பதா? சர்ச்சையாகும் கனடாவின் முக்கிய மூவ்
ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது இரு நாட்டு உறவுகளை பாதித்துள்ள நிலையில், இந்த பிரச்னைக்காக வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் இந்தியா குறித்து கனடா முறையிட இருக்கிறது. கனடாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பஞ்சாயத்தை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
காலிஸ்தான் பிரிவினைவாதியாக இருந்த நிஜ்ஜார் இந்தியாவில் இருந்தபோது, நாட்டின் ஒற்றுமைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அவரை புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வந்துக்கொண்டிருந்தன. தொடர் கண்காணிப்புகள், கைது அச்சம் சூழ்ந்த நிலையில், நிஜ்ஜார் கனடாவுக்கு தப்பி சென்றுவிட்டார். அங்கு அவர் குடியுரிமையும் பெற்றுவிட்டார்.

எல்லாம் சரியாக இருந்ததாக கருதப்பட்டு வந்தபோதுதான் அவரது கொலை நடந்தது. இந்த கொலை மொத்த கனடா போலீசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. எனவே கொலை குறித்து முழு விசாரணையில் இறங்கியது. விசாரணையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. கடந்த ஆண்டே இந்த பஞ்சாயத்து பெரியதாக வெடித்தது. குற்றம்சாட்டிய அடுத்த நிமிடமே, இந்தியா அதற்கு மறுப்பு தெரிவிக்க, பதிலுக்கு தூதரக அதிகாரியை கனடா வெளியேற்ற.. இந்தியாவும் இதையே செய்தது.
பின்னர் பேச்சுவார்த்தை மூலம் நிலைமை ஓரளவுக்கு சீராகி, வாபஸ் பெற்ற தூதரக அதிகாரிகளை மீண்டும் கனடாவுக்கும், இந்தியாவுக்கும் அந்தந்த நாடுகள் அனுப்பி வைத்தன.
ஆனால் இதே பஞ்சாயத்து இப்போது மீண்டும் வெடித்து கிளம்பியிருக்கிறது. இதற்கு முதல் காரணம் கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ பேசியதுதான். நிஜ்ஜார் எங்கள் நாட்டின் குடிமகன், அவரை இந்தியா கொன்றிருக்கிறது. இந்தியாதான் இதன் குற்றவாளி என்று பேசியிருந்தார். அவரது பேச்சு இந்தியாவின் சுயமரியாதையை கடுமையாக சீண்டியது.
ட்ரூடோ இத்துடன் நிற்கவில்லை. அவரது தலைமையிலான காவல்துறை மேலும், மேலும் இந்திய அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியது. குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, பழி கூறியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியது. இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பிய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் வந்து விளக்கம் அளிக்க கூறியிருந்தது.
மறுபுறம், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது கனடா. இந்தியா பலமுறை கேட்டும் இந்த வழக்கு குறித்த எந்தவொரு சிறிய ஆதாரத்தையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சமீபத்திய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது இந்தியா மீதான கனடா பிரதமர் ட்ரூடோவின் விரோதம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு இந்திய-விரோத பிரிவினைவாதத்திற்கு உதவுகிறது என்று கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது.
இப்படியாக பஞ்சாயத்துகள் கிளம்பியுள்ள நிலையில், வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் (Foreign Interference Commission) இந்தியா மீதான குற்றச்சாட்டை எழுப்ப கனடா திட்டமிட்டிருக்கிறது. நாளை ட்ரூடோ இந்த ஆணையம் முன்பு ஆஜராகிறார். ஆணையத்தில் இந்தியா மீது சரமாரியாக குற்றச்சாட்டை எழுப்ப உள்ளார். இப்படி செய்வதன் மூலம் இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications