“ஆச்சரியப்படுத்தும் புதின்! ஆனா பாருங்க..” அதிருப்தியில் டிரம்ப்! உக்ரைன் விஷயத்தில் அப்செட்
வாஷிங்டன்: உக்ரைன் விஷயத்தில் புதின் நன்றாகத்தான் பேசுகிறார் என்றும் ஆனால், அடிக்கடி குண்டுகளை வீசுகிறார் எனவும் டிரம்ப் விமர்சித்திருக்கிறார். மட்டுமல்லாது உக்ரைனுக்கு 'பேட்ரியாட்' எனும் அமெரிக்க வான் பாதுகாப்பு அம்சத்தையும் கொடுக்க முன்வந்திருக்கிறார்.
இது குறித்து டிரம்ப் கூறுகையில், "நாங்கள் உக்ரைனுக்கு பேட்ரியாட்' எனும் அமெரிக்க வான் பாதுகாப்பு அம்சத்தை வழங்க இருக்கிறோம். அவர்களுக்கு இது மிகவும் அவசியம். உக்ரைனுக்கு இன்னும் எவ்வளவு ஆயுதங்களை அனுப்புவது என்பது குறித்து இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு அவசியம் எனில் ஆயுதங்களை அனுப்புவோம்.

ஆச்சரியப்படுத்தும் புதின்
ஏற்கெனவே உக்ரைனுக்கு அனுப்பபட்ட ஆயுதங்களில் சில நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நவீன ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக அவர்கள் பணம் கொடுக்க வேண்டும். ஆயுத விநியோகம் இனி பிஸினசாக நடக்கும்" என்று கூறியுள்ளார்.
மேலும் ரஷ்ய அதிபர் புதின் குறித்து பேசிய அவர், "புதின் உண்மையிலேயே பலரை ஆச்சரியப்படுத்தினார். அவர் நன்றாகப் பேசுகிறார், பின்னர் மாலையில் அனைவரையும் தாக்குகிறார்" என்று கூறியுள்ளார்.
போர் நிறுத்தம்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றிருந்தார். அவர் பதவிக்கு வந்த பின்னர் உலகம் முழுவதும் நடக்கும் போர்களை நான் நிறுத்துவேன் என்று அறிவித்திருந்தார். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக நடந்துக்கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்யா போரை டிரம்பால் நிறுத்த முடியவில்லை. அமெரிக்காவும், உக்ரைனும் சேர்ந்து போர் நிறுத்துவதற்காக சில ஒப்பந்தங்களை முன்மொழிந்தது. ஆனால் புதின் எதையும் ஏற்கவில்லை.
பழைய கபாலினு நினைச்சியா?
ஐரோப்பிய நாடுகளை போல, உக்ரைன் பின்னாடி நின்னுகிட்டு, போரை தீவிரபடுத்த மாட்டேன் என்று சொல்லிய டிரம்ப், நேரடியாக புதினுக்கு போன் அடித்து போர் குறித்து பேசியிருந்தார். இந்த அப்ரோச் சர்வதேச அளவில் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது. இப்படி இன்னும் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டார். இருப்பினும் போர் இப்போது வரை நிற்கவில்லை.
டிரம்ப் இந்த போரில் தலையிடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வாங்க வேண்டும் என்பதில் ஆசை. இரண்டாவது, உக்ரைனில் உள்ள கனிம வங்களை கொள்ளையடிக்க வேண்டும்.
நோபல் பரிசு
இரண்டுக்கும் இந்த போர் நிறுத்தம் தேவை. எனுவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கூப்பிட்டு, வெள்ளை மாளிகையில் வைத்து அசிங்கப்படுத்தினார் டிரம்ப். நான் சொல்லும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் ஜெலன்ஸ்கியும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மறுபுறம் உக்ரைனுக்கு இதுவரை கொடுத்த உதவிக்காக, அந்நாட்டின் கனிம வளங்களில் பாதியை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் ஒப்பந்தத்தை போட்டார்.
கனிம வளங்கள்
இப்போதைக்கு இரண்டு ஆசைகளில், கனிம வளங்களை சுரண்டுவது என்கிற ஒன்று மட்டும் நிறைவேறியிருக்கிறது. இரண்டது அமைதிக்கான நோபல் பரிசு. இதற்கு ரஷ்யா மனசு வைக்க வேண்டும். புதினை சமாளிப்பதுதான் டிரபுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்த பின்னணியில்தான் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக கூறி, புதின் மீது விமர்சனங்களை அடுக்கியுள்ளார் டிரம்ப்.
ரஷ்யாவும் புதினும்
புதினை பொறுத்தவரை இந்த போர் வாழ்வா சாவா பிரச்சனை. ஏனெனில், நேட்டோவில் உக்ரைன் சேர்ந்துவிட்டால், ரஷ்ய மக்களுக்கு புதின் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். ஏற்கெனவே 21 ஆண்டுகளாக ரஷ்யாவின் அதிபராக புதின் இருக்கிறார். அவருக்கு எதிராக தொடர்ந்து அதிருப்திகள் இருக்கின்றன. இந்த நேரத்தில் உக்ரைன் விஷயத்தை கோட்டைவிட்டு விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். எனவேதான் போர் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications