பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மத்திய கிழக்கு பகுதியில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் அதிரடி வான்வழித் தாக்குதல்கள் தற்போது எல்லையை கடந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்-ஐ வரை சென்றுள்ளது. இது ஈரானுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டு நட்பு முறியும் அளவிற்கு சென்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் கடுமையாக திட்டியுள்ளார். "நீ என்ன செய்கிறாய்?" என்று கோபத்துடன் கேட்ட டிரம்ப், நெதன்யாகுவை " பைத்தியக்காரனா நீ.." என்று அழைத்ததாக வெளியான செய்திகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

trump Netanyahu Lebanon Iran Israel trump calls netanyahu crazy trump netanyahu phone call lebanon trump blasts netanyahu us israel tensions 2026 netanyahu lebanon strikes iran halts us talks hezbollah rocket attack israel trump warns netanyahu beirut middle east escalation trump netanyahu argument

இரவில் வந்த போன் கால்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முழுமையாக நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளது. இந்த நிலையில், டிரம்ப், நெதன்யாகுவை நேற்று இரவு அழைத்துப் பேசினார்.

இந்த உரையாடலில் டிரம்ப் மிகுந்த கோபத்துடன் இருந்துள்ளதாகவும், இஸ்ரேலின் அதிகப்படியான ராணுவ நடவடிக்கை உலக அளவில் இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தை அதிகரிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். "நான் உன்னை காப்பாற்றுகிறேன், நீ பைத்தியக்காரத்தனமாக செயல்படுகிறாய்" என்று டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப்-நெதன்யாகு உரையாடல்

அமெரிக்கா தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கடும் வாக்குவாதம் நிறைந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.

அந்த உரையாடலின் போது, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட சமீபத்திய ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நீடித்தால், சர்வதேச அரங்கில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படும் என டிரம்ப் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தாக்குதலால் கோபமடைந்திருந்த டிரம்ப், "நீ முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டு இருக்கிறாய். நான் இல்லையென்றால் நீ சிறையில் தான் இருந்திருப்பாய். நான் தான் உன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது அனைவரும் உன்னை வெறுக்க துவங்கியுள்ளனர், இந்தச் சம்பவங்களால் இஸ்ரேலையும் அனைவரும் வெறுக்கிறார்கள்" என்று கடுமையாக பேசியதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

உரையாடலின் ஒரு கட்டத்தில், நெதன்யாகுவை நோக்கி டிரம்ப், "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று சத்தமாகக் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்

இந்த போன் கால் தொடர்ந்து இன்று காலை, லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இஸ்ரேல் படை அவற்றை வெற்றிகரமாக வானிலேயே தடுத்து அழித்துள்ளது. இந்த ஏவுகணை மூலம் வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் அவசர எச்சரிக்கை ஒலிகள் முழங்கின. இருப்பினும், எந்த உயிரிழப்போ அல்லது பெரிய சேதமோ ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் இஸ்ரேல் - லெபனான் எல்லையில் அமைதி முயற்சிகளுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

நெதன்யாகுவின் பதில்

நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில், "ஹிஸ்புல்லா எங்கள் நகரங்களையும் மக்களையும் தாக்குவதை நிறுத்தாவிட்டால், பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத இலக்குகளைத் தாக்குவோம். எங்களுடைய இந்த நிலைப்பாடு மாறாது" என்று தெரிவித்தார். தெற்கு லெபனானில் தொடர்ந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஈரானின் எச்சரிக்கை

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாப், ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்தார். "இஸ்ரேல் லெபனானில் தனது போர் குற்றங்களை நிறுத்தாவிட்டால், ஈரான் பேச்சுவார்த்தை மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு எதிராக உறுதியாக நிற்கும்" என்று அவர் எச்சரித்தார்.

இந்த மோதல் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழிகள் பாதிக்கப்படலாம். இது உலக அளவில் எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். டிரம்ப் நெதன்யாகுவை கடுமையாக எச்சரித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் இந்தப் பிரச்சனை எப்படி தீர்க்கப்படும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+