ஈரான் தாக்குதலுக்கு காரணமே நாங்கதான்.. உள்ளே வந்து உருட்டிய அமெரிக்கா! டிரம்ப் சொன்னதை கவனிச்சீங்களா!
வாஷிங்டன்: ஈரான் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இந்த சண்டைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியிருந்தார். இப்போது அவரது கூற்றை மறுக்கும் வகையில், "போருக்கு காரணமே நாங்கதான்" என டிரம்ப் கூறியுள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில், "ஒப்பந்தம் செய்வதற்கு ஈரானுக்கு நான் பல வாய்ப்புகளைக் கொடுத்தேன். மிகக் கடுமையாக, 'உடனே ஒப்பந்தம் போடுங்கள்' என்று சொன்னேன். ஆனால், எவ்வளவு கடுமையாக முயற்சித்தாலும், எவ்வளவு நெருங்கி வந்தாலும், ஈரானால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த, எதிர்பார்த்த விளைவுகளைவிட இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் எச்சரித்தேன்.

அமெரிக்கா உலகின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் கொடிய இராணுவ உபகரணங்களைத் தயாரிக்கிறது. FAR ஒப்பந்தம் மூலம், இஸ்ரேலிடம் அவற்றில் நிறைய இருக்கின்றன. இன்னும் அதிகமாக வரவுள்ளன. அதையெல்லாம் எப்படிப் பயன்படுத்துவது என்று இஸ்ரேலுக்கு தெரியும். இதைப்பற்றி கவலைப்படாமல் சில ஈரானிய தலைவர்கள் தைரியமாகப் பேசினார்கள். ஆனால், என்ன நடக்கப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அனைவரும் இப்போது இறந்துவிட்டனர்.
இது மேலும் மோசமாக மட்டுமே இருக்கும்! ஏற்கனவே பெரும் மரணமும் அழிவும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நேரம் உள்ளது. அடுத்த திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் இன்னும் கொடூரமாக இருக்கும். எதுவும் மிச்சம் இல்லாமல் போவதற்கு முன்னதாக, ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஒரு காலத்தில் ஈரானியப் பேரரசு என்று அறியப்பட்ட அவர்களின் வரலாற்றை காப்பாற்ற வேண்டும். இனி மரணம் வேண்டாம், இனி அழிவு வேண்டாம், இப்போதே ஒப்பந்தம் செய்யுங்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்!" என்று கூறியுள்ளார்.
முன்னதாக ரூபியோ, "இன்று இரவு இஸ்ரேல், ஈரானுக்கு எதிராகத் தன்னிச்சையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் (அமெரிக்கா) ஈடுபடவில்லை. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாகும். இந்த நடவடிக்கை தங்களின் தற்காப்புக்கு அவசியமானது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்ப்பும் நிர்வாகமும் எங்கள் படைகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. மேலும் எங்கள் கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம்.
நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஈரான் அமெரிக்க நலன்களையோ அல்லது படைகளையோ குறிவைக்கக் கூடாது" என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கும், டிரம்ப்பின் பேச்சுக்கும் சுத்தமாக சம்பந்தமே இல்லாததை போன்று தோன்றுகிறது.
மட்டுமல்லாது, இஸ்ரேல் நடந்தும் எல்லா தாக்குதலுக்கு பின்னாலும் அமெரிக்கா இருப்பதை உலகமே அறியும். அப்படி இருக்கும்போது, டிரம்ப் இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications