டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி!
மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் நிலவி வந்த தற்காலிக அமைதி குலைந்து, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நேரடி ராணுவ மோதல் வெடித்துள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் நேற்று இரவு இஸ்ரேலின் வடக்கு பகுதியை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியது மூலம் இஸ்ரேல் உயர்மட்டத்தில் பதற்றம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4:43 மணி அளவில் இஸ்ரேல் ராணுவம் ஈரானின் தலைநகர் டெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் தப்ரிஸ் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

டிரம்ப் கதறல்
மத்திய கிழக்கில் தங்களின் கட்டுப்பாட்டை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்தத் தாக்குதல் ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அடுத்த சில நாட்களில் ஒரு மிக முக்கிய அமைதி ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகப் போகிறது என்றும், அதற்கான சாத்தியக்கூறுகள் மிக பிரகாசமாக இருப்பதாகவும் டிரம்ப் சமீபத்தில் கூறிவந்தார்.
மேலும், தி பைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், "மத்திய கிழக்கில் நான்தான் இறுதி முடிவுகளை எடுக்கிறேன்; ஈரானுடன் அமெரிக்கா செய்யும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதை தவிர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை" என்று அதிரடியாகக் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் சொல்லியும் கேட்காத நெதன்யாகு
இந்தச் சூழலில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் செய்த தாக்குதலை தொடர்ந்தது.
டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைத் தொலைபேசியில் அழைத்து அமைதி காக்குமாறு (Restraint) வலியுறுத்தினார்.
இதையும் மீறி, இஸ்ரேல் ஈரான் மீது அதிகாலை பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் சமாதான முயற்சிகளையும், டிரம்பின் சர்வதேசப் பேச்சுவார்த்தை திட்டங்களையும் இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கை மிகப்பெரிய சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.












Click it and Unblock the Notifications