For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு பாராட்டு தெரிவித்த ட்ரம்ப்!

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமைப்படுவதாகவும், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அதிபர் டொனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஆசின் மாவட்டத்தில் ஐ.எஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான நங்கர்ஹார் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளனர்.

Trump said he is proud of U.S. forces after a

‛‛மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் சுமார் 21,000 பவுன்ட் எடையுள்ள 'MOAB' எனப்படும் சக்திவாய்ந்த குண்டை இரவு சுமார் 7.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் மீது வீசியுள்ள அமெரிக்கா. எனினும் இது அணுகுண்டு அல்ல என்றும் அமெரிக்க ராணுவ தலைமைச் செயலகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதலை நிகழ்த்திய அமெரிக்க ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
President Donald Trump said he is proud of U.S. forces after a "very successful mission" in Afghanistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X