கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி
பென்சில்வேனியா: அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி வருகிறது. முன்னதாக வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி 60 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்காக உடனடியாக கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும்படி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு சுகாதார அதிகாரிகளுக்கு கடும் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
அதிபர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற வாக்காளர் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து நடவடிக்கைககள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சியில் கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாகவும், மூன்று அல்லது நான்கு வாரங்களில் இதுதொடர்பாக உங்களுக்குத் தெரிவிப்போம் என்றும் கூறினார்.
இந்தக் கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ட்ரம்ப், கொரோனா தடுப்பு மருந்து இன்னும் நான்கு வாரங்கள் முதல், எட்டு வாரங்களில் தயாராகி விடும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டார் பல லட்சம் பேரின் வாழ்க்கையும் பொருளாதாரமும் பாதிக்க ட்ரம்ப் காரணமாகிவிட்டார் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை ஒரு மாதத்தில் கண்டுபிடித்து விடுவோம் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications