வரலாறு காணாத அளவுக்கு குண்டுகளை வீசுவோம்.. ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
வாஷிங்டன்: தங்களுடன் அணு ஆயுத உடன்படிக்கைக்கு வர மறுத்தால், ஈரான் மீது வரலாறு காணாடஹ் அளவுக்கு குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆனால் அப்படியான தாக்குதல் நடந்தால் மேற்காசியாவில் அமெரிக்காவுக்கு என இருக்கும் கட்டமைப்புகள் அனைத்தும் அடித்து நொருக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா ஏற்கெனவே பல்வேறு தடைகளை விதித்து வந்திருக்கிறது. இந்த தடைகள் காரணமாக அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் அமெரிக்கா நினைத்ததை போல ஈரான் சிக்கலில்தான் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த காலங்களில் ஈரான் பிரிக்ஸ் உடன் சேர்ந்து வளர தொடங்கியுள்ளது. தற்போது ஈரான் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது.
அதே நேரம் சொந்த தேவைக்காக யுரேனியத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. அணு உலைகளில் மின்சார தயாரிப்புக்காக யுரேனியம் பயன்படுத்தப்படும். 2015 அணு ஒப்பந்தத்தின்படி (JCPOA) - இரான் 3.67% வரை மட்டுமே யுரேனியத்தை செறியூட்டிக்கொள்ள அனுமதித்தது. ஆனால், அமெரிக்கா (Trump Administration) ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, ஈரான் தனது செறிவூட்டலை அதிகரிக்க தொடங்கியது.
1. 2021 - இரான் 20% செறிவூட்டலுக்கு சென்றது
2. 2022-23 - இரான் 60% செறிவூட்டம் செய்து வருகிறது
90% செறிவூட்டம் செய்யப்பட்டால் அந்த யூரேனியத்தை அணு குண்டு தயாரிக்க பயன்படுத்த முடியும். எனவேதான் அமெரிக்கா எச்சரிக்கை செய்து வருகிறது. ஆனால் இப்போது வரை ஈரானின் யூரேனியம் செறிவூட்டல் 60%-ஐ தாண்டவில்லை. தங்கள் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே 60% செறிவூட்டலை செய்து வருகிறோம் என்று ஈரான் கூறியுள்ளது. இதனை ஏற்காத டிரம்ப், உடனடியான அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைந்து செறிவூட்டலை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதனை ஈரான் செய்யவில்லை எனில், அந்நாட்டின் மீது வரலாறு காணாத அளவுக்கு குண்டுகளை வீசுவதாகவும் எச்சரித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது குண்டுகளை வீசினால் மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுக்கு என சொல்லிக்கொள்ள ராணுவ தளமோ, சொந்த கட்டமைப்புகளோ எதுவும் இருக்காது என்று எச்சரித்தள்ளது.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications