ரூ.770 கோடி போச்சே.. இந்தியர்கள் ரத்து செய்யும் திருமணத்தால் துருக்கிக்கு புது சிக்கல்! எப்படி?
அங்காரா: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கண்டித்து பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை நம் நாட்டின் சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் எடுத்துள்ளனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. அந்த வரிசையில் நம் இந்தியர்கள் கேன்சல் செய்யும் திருமணத்தால் துருக்கிக்கு சுமார் ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதையடுத்து நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பந்தாடியது. நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தான் உள்ளே புகுந்து தாக்கியது.

பயங்கரவாதிகளின் 9 முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. நம் நாட்டின் இந்த பதிலடி தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன. அதோடு பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு நேரடியாகவும், வெளிப்படையாகவும் துருக்கி, அஜர்பைஜான் ஆதரவை அறிவித்தன.
இதில் துருக்கி என்பது நம் நாட்டுக்கு பெரும் துரோகம் செய்தது. துருக்கி சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்றது. நம் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் துருக்கி சென்று வருகின்றன. அதேபோல் 2023ம் ஆண்டில் துருக்கியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் நம் நாடு துருக்கிக்கு உதவிகளை வழங்கியது. நம் நாட்டில் இருந்து மீட்பு படையினர், டாக்டர்கள், நர்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் அதையெல்லாம் துருக்கி மறந்துவிட்டு பாகிஸ்தான் பக்கம் சென்றது. அதோடு நம்மை கண்டித்தது. அதுமட்டுமின்றி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் நம்மை தாக்க ட்ரோன் மற்றும் அதனை ஆபரேட் செய்யும் ஆபரேட்டர்களை வழங்கி துருக்கி நம்பிக்கை துரோகியானது. இதனால் துருக்கிக்கு நம் மக்கள் பாடம் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கியை புறக்கணிக்கும் முடிவை சுற்றுலா பயணிகள் எடுத்துள்ளனர். அதேபோல் வர்த்தகர்களும் துருக்கி நாட்டின் பொருட்களை இறக்குமதி செய்வதையும், துருக்கிக்கு ஏற்றுமதி செய்வதையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது துருக்கியின் பொருளாதாரத்தில் பெரும் அடியை கொடுக்க உள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துருக்கி சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற இடம் என்பதால் நம் நாட்டை சேர்ந்த பணக்காரர்கள் துருக்கியில் வைத்து திருமணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன்மூலம் துருக்கி கல்லா கட்டி வந்தது. தற்போது நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டால் பலரும் துருக்கியில் திருமணம் செய்ய எடுத்த முடிவை கைவிட்டுள்ளன. இதன்மூலம் துருக்கிக்கு நேரடியாக ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று அந்த பிரிவை நன்கு அறிந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் துருக்கியில் வைத்து நம் நாட்டை சேர்ந்தவர்களின் 50 திருமணம் நடந்தது. இதில் ஒவ்வொரு திருமணத்துக்கான செலவு என்பது ரூ.25 கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த திருமணம் என்பது துருக்கியில் ஹோட்டல் பிசினஸை மட்டும் வளர்க்கவில்லை. அலங்காரம் செய்யும் ஊழியர்கள், மலர் விற்பனையாளர்கள், உணவு வழங்கும் நிறுவனங்கள், டிராவல் ஏஜென்ட், இசை கலைஞர்களுக்கும் வலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
துருக்கியில் வரும் நாட்களில் 50 திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 30 திருமணங்கள் தொடர்பான பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பலரும் துருக்கிற்கு பதில் நம் நாட்டில் ராஜஸ்தான், கோவா, கேரளா, உதய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது. இது துருக்கிக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துருக்கியில் நடக்கும் இந்தியர்களின் திருமணத்தால் அந்த நாட்டுக்கு ரூ.1,170 கோடி வரை வருமானம் கிடைக்கும். தற்போது அந்த வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும்'' என்று கூறியுள்ளனர்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications