துருக்கி - சிரியா நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 29 ஆயிரமாக உயர்வு.. 16 ஆயிரம் பேர் படுகாயம்.. அதிர்ச்சி
துருக்கி நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அன்காரா: துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. சிரியாவில் இதுவரை 4 ஆயிரம் பேர் நிலநடுக்கம் காரணமாக பலியாகி உள்ளனர்.
துருக்கியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கம் காரணமாக படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து உள்ளனர்.
துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

துருக்கி
துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன. துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும். துருக்கி நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டு உள்ளது. அதாவது 100 கிமீ தூரத்திற்கு தரையில் அடுக்குகள் இரண்டாக பிளந்து நகர்ந்து உள்ளன. 100 கிமீ தூரத்திற்கு நில அடுக்குகள் பிரிந்து பிளவுபட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு மோசமான நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டு உள்ளது.

மோசமான நிலை
அடுத்தடுத்து மூன்று முறை இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதோடு ஒரு முறை பிளேட் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் பிளேட்களும் நகரும் சூழ்நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும். இதன்பின் இந்த நிலநடுக்கம் முடிந்தும் சிறிய அளவிலான நகர்வுகள் இருக்கும். இதை ஆப்டர் எபக்ட் என்றும் கூறுவார்கள்.துருக்கி நிலநடுக்கத்தில் இப்படித்தான் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

சிரியா
அங்கு கடந்த ஒரு வாரமாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடும் குளிர் இருப்பதாலும், கட்டிடங்கள் அதிக அளவில் இடிந்து உள்ளதாலும் இங்கே மீட்பு பணிகளை செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிருடன் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக படுகாயம் அடைந்த பலர் 2-3 நாட்களாக இடிபாடுகளுக்கு இடையில் உயிருடன் இருந்த ஆச்சர்ய சம்பவங்களும் நடந்து உள்ளன.

சிரியா
துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சிரியாவில் 4000 பேர் இதுவரை நிலநடுக்கம் காரணமாக பலியாகி உள்ளனர். 6000 பேர் சிரியாவில் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். 7 ஆயிரம் கட்டிடங்கள் துருக்கியில் இடிந்து விழுந்து உள்ளன. சிரியாவில் 3 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சிரியாவில் போராளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் போராளிகள் இருக்கும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வது சிரமம் ஆகி உள்ளது. மேலும் 2-3 வாரத்திற்கு அங்கு மீட்பு பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.












Click it and Unblock the Notifications