மீண்டும் திமிரை காட்டும் துருக்கி.. இந்தியாவின் 3 நட்பு நாடுகளை குறிவைத்த எர்டோகன்.. பகீர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

அங்காரா: நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கும் 3 நாடுகளை மிரட்டும் வகையில் துருக்கி புதிய செயல்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பிரிட்டன் மற்றும் ஜெர்மனியிடம் இருந்து 40 யூரோ ஃபைட்டர் ஜெட் போர் விமானங்களை துருக்கி வாங்குவதன் மூலம் நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் இஸ்ரேல், சைப்ரஸ் மற்றும் கிரீஸ் உள்ளிட்ட 3 நாடுகள் சந்திக்கும் பேராபத்து? பற்றியும், இந்த நாடுகள் நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்படுவது எப்படி? பற்றியும் இங்கு பார்க்கலாம்.

நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் துருக்கி செயல்பட்டு வருகிறது. நம் பரம எதிரியான பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை தொடர்ந்து சீண்டி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த துருக்கி சமீபத்திய போரில் பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள், ட்ரோன் ஆபரேட்டர்களை வழங்கி நம்மை தாக்கியது. ஆனால் நம் படைகளின் திறமையான செயல்பாட்டால் அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

turkey-targets-indias-3-friendly-nations-israel-greece-and-cyprus-after-the-deal-with-40-eurofigh

மேலும் துருக்கிக்கு சுற்றுலா செல்வதை நம் நாட்டு மக்கள் தவிர்த்துள்ளனர். அதேபோல் துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை வியாபாரிகளை நிறுத்தி உள்ளனர். இது நேரடியாக துருக்கியின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும் கூட துருக்கி மட்டும் திருந்தவில்லை. தொடர்ந்து நம் நாட்டை சீண்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

இதனால் நம் நாடும் துருக்கியை சீண்ட தொடங்கி உள்ளது. துருக்கிக்கு அதன் அண்டை நாடுகள் மூலமாக ‛செக்' வைக்கும் பணியில் நம் நாடு ஈடுபட்டு வருகிறது. துருக்கி சண்டையிட்டு வரும் அண்டை நாடுகளுடன் கிரீஸ், சைப்ரஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் நம் நாடு இணக்கமாக செயல்பட்டு வருகிறது. சைப்ரஸ் நாட்டுக்கு சமீபத்தில் பிரதமர் மோடி சென்று வந்தார். அதேபோல் கிரீஸ் நாட்டுக்கு நம் நாட்டின் விமானப்படை அதிகாரி டீம் சென்று வந்தது. இஸ்ரேலுடன் நமக்கு காலம் காலமாக பந்தம் உள்ளது.

இப்படி நம் நாட்டுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் கிரீஸ், சைப்ரஸ், இஸ்ரேல் உள்ளிட்டவற்றை மிரட்டும் வகையில் துருக்கி தற்போது புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரிட்டன் மற்றும் ஜெர்மனியுடன் ஒரு முதற்கட்ட ஒப்பந்தத்தை துருக்கி மேற்கொண்டுள்ளது. ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் இணைந்து உருவாக்கிய 4.5 தலைமுறை அதிநவீன போர் விமானமான யூரோஃபைட்டர் டைபூனை துருக்கி 5.6 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகன் அந்த நாட்டின் விமானப்படையை நவீனமயமாக்க விரும்புகிறார். துருக்கி நேட்டோவில் உள்ளது. இதனால் நேட்டோவின் நாடுகளிடம் இருந்து போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்க டிரம்பிடம், எர்டோகன் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது நேட்டோவில் உள்ள ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் கூட்டு தயாரிப்பான யூரோ ஃபைட்டர் டைபூன் வகை 40 போர் விமானங்களை வாங்க துருக்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த யூரோ ஃபைட்டர் டைபூன் வகை போர் விமானம் நம் நாடு பயன்படுத்தி வரும் ரபேல் விமானம் மற்றும் அமெரிக்காவின் எஃப் 16 ரக போர் விமானங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் காரணமாக தற்போது ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல், கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகள் கோபத்தை கொப்பளித்துள்ளன.

ஏனென்றால் சைப்ரஸின் சில பகுதிகளை துருக்கி ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதனால் அந்த நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையே பிரச்சனை உள்ளது. அதேபோல் ஏஜியன் கடல் தீவுகள் தொடர்பாக கிரீஸ் மற்றும் துருக்கி இடையே பிரச்சனை உள்ளது. இந்த தீவின் பெரும்பாலான பகுதி கிரீஸ் வசம் உள்ளது.

ஆனால் ஒருசில இடங்கள் துருக்கி வசம் இருக்கிறது. இந்த பகுதி என்பது எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் துருக்கி இந்த இடத்தை கைப்பற்ற முயன்றது. அன்று முதல் இருநாடுகள் இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. இன்று வரை மோதல் நீடித்து வருகிறது அதேபோல் இஸ்ரேலுக்கும், துருக்கிக்கும் இடையே நீண்டகால பகை உள்ளது.

இப்படியான சூழலில் துருக்கிக்கு நவீன போர் விமானங்களை வழங்குவது சைப்ரஸ், கிரீஸ், இஸ்ரேலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். இதனால் 3 நாடுகளும் பிரிட்டன், ஜெர்மனியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இந்த விமர்சனத்தை தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன் சார்பில் யூரோ ஃபைட்டர் டைபூன் ரக போர் விமானங்களை கிரீஸ் நாட்டுக்கு எதிரான பயன்படுத்த கூடாது என்பது கண்டிஷனாக வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கிரீஸ் நாடும் நேட்டோ உறுப்பு நாடாக உள்ளதால் இந்த கண்டிஷன் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிரீஸ் தப்பித்தாலும் கூட சைப்ரஸ் மற்றும் இஸ்ரேலுக்கு துருக்கியால் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. இஸ்ரேலுக்கும், துருக்கிக்கும் காலம் காலமாக மோதல் உள்ளது. இதனால் இஸ்ரேல், எஃப் 35 ரக போர் விமானங்களை துருக்கிக்கு வழங்க அமெரிக்காவிடம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதேபோல் துருக்கி ரஷ்யாவின் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை ரஷ்யாவின் தளவாடங்களை பயன்படுத்தும் நேட்டோ நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம் என்ற கொள்கை உள்ளது.

இதனால் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்கள் துருக்கிக்கு கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில் தான் ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் கூட்டு தயாரிப்பான யூரோ ஃபைட்டர் டைபூன் வகை 40 போர் விமானங்களை வாங்க துருக்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+