பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே குண்டுவெடிப்பு - 5 பேர் பலி
பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே இன்று காலை நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.
பெஷாவர்: பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே இன்று காலை இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 5 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளதுசர்ச்சட்டா மாவட்டம். இங்குள்ள டாங்கி நகரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.
5 killed, 20 injured in blasts outside court in Pakistan's Charsaddahttps://t.co/Ph82jDiaUb pic.twitter.com/KHPOUxZf51
— HuffPost India (@HuffPostIndia) February 21, 2017
இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த 6 பேர் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த வாரம் பிரேசன் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications