பெய்ரூட்டில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் பலி, 239 பேர் காயம்
பெய்ரூட்: லெபனானில் உள்ள பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர், 239 பேர் காயம் அடைந்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறந்கர் பகுதியான புர்ஜ் அல் பரஜ்னே பகுதியில் வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர், 239 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினரின் கோட்டையான அந்த பகுதியில் ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். ஷியா அமைப்பான ஹிஸ்புல்லா சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வருகிறது.
இந்நிலையில் இந்த இரட்டை தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எத்தனை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது தெளிவாக தெரியவில்லை.
இது குறித்து லெபனான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஒரு தீவிரவாதி ஷியா மசூதிக்கு வெளியே தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். மற்றொரு தீவிரவாதி பேக்கரி அருகே தான் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். மூன்றாவது தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யும் முன்பு பலியாகியுள்ளார்.
இரண்டாவது நபர் நடத்திய தாக்குதலில் அந்த தீவிரவாதி பலியாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications