அஜித், விஜய்க்காக அதிகமாக சண்டைபோடலாம்.. வார்த்தை கட்டுப்பாட்டை தளர்த்துகிறது டிவிட்டர்
வாஷிங்டன்: டிவிட்டர் தனது 140 வார்த்தை கட்டுப்பாட்டை நீக்க உள்ளது. இனிமேல், 1000 வார்த்தைகள் வரை டைப் செய்ய வசதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளமான டிவிட்டரில் தற்போது 140 வார்த்தைகளுக்கு மிகாமல் கருத்தை பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. டிவிட்டரின் அழகியல் அதுதான் என்றபோதிலும், சில நேரங்களில் அதுவே உபத்திரமாகவும் மாறிவிடுகிறது.

கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க வேண்டி, 140 வார்த்தைகளை தாண்டி டைப் செய்துவிட்டு, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்யும்போக்கு உள்ளது. இதுதவிர, டிவிட் லாங்கர் என்ற வசதியை பயன்படுத்தியும், கருத்துக்களை அதிகமாக கூற முடியும்.
இந்நிலையில், வார்த்தை கட்டுப்பாட்டை 140 என்பதில் இருந்து மாற்றி ஆயிரமாக உயர்த்த டிவிட்டர் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதவாக்கில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
எனவே டிவிட்டரில் அஜித்-விஜய்க்காக சதா காலமும் சண்டை போட்டுக்கொள்ளும் ரசிக சிகாமணிகள், இனிமேல் தங்கள் நோக்கத்தை அதிக ஆர்வத்தோடு நிறைவேற்றிக்கொள்ளலாம்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடியின் தொடக்க உரையே 1366 வார்த்தைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications