ஜெர்மனியில் 18 வயது வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலி, 2 பேர் காயம்
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பவாரியாவில் காரில் இருந்தபடி பொதுமக்களைப் பார்த்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள பவாரியா மாநிலத்தில் இருக்கும் அன்ஸ்பாக் நகரில் ஒருவர் தனது காரில் வந்துள்ளார். அவர் திடீர் என்று காரை நிறுத்தி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சாலையில் சென்றவர்களை நோக்கி சுட்டார்.

இதில் மூதாட்டி, சைக்கிளில் சென்ற ஆண் ஆகிய இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இரண்டு பேர் மீது குண்டு பாய்ந்தது. அதன் பிறகு அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தின். பின்னர் போலீசார் அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
மெர்சிடீஸ் காரில் வந்து இந்த தாக்குதலை நடத்தியவர் வெறும் 18 வயதே ஆன வாலிபர் என்று அதிகாரிகள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications