இரு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஓமிக்ரான் பாதிப்பு .. வங்கதேசத்தில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டாக்கா: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வங்கதேச கிரிக்கெட் அணியின் இரு வீராங்கனைக்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் இதுவரை 15 லட்சத்து 78 ஆயிரத்து 996பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 28,022 ஆக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நாட்டு மக்களிடையே உச்சகட்ட அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜிம்பாப்வே சென்று திரும்பிய வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்

வங்கதேச மகளிர் தேசிய கிரிக்கெட் அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் பங்கேற்க சென்ற அக்டோபரில் ஜிம்பாப்வே சென்றது. தகுதிச்சுற்றுடன் தாயகம் திரும்பிய நிலையில் வீராங்கனைகள் டிசம்பர் ஆறாம் தேதி கோவிட் 19 சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இரண்டு பேருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்த நிலையில், மரபணு மாதிரிகள் வரிசைப்படுத்தலுக்காக ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் இரு வீராங்கனைகளும் ஓமிக்ரான் மாறுபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கவலைப்படத் தேவையில்லை - அதிகாரிகள்

கவலைப்படத் தேவையில்லை - அதிகாரிகள்

21 மற்றும் 30 வயது உடைய இரு வீராங்கனைகளுக்கும் ஓமிக்ரான் மாறுபாடு வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், முழு கிரிக்கெட் அணியும் தனிமைப்படுத்தலில் உள்ளதால் யாரும் கவலைப்படத் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தனிமைப்படுத்தலில் வீராங்கனைகள்

தனிமைப்படுத்தலில் வீராங்கனைகள்

இதுகுறித்து வங்கதேச சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது இரண்டு வீராங்கனைகளும் ஜிம்பாப்வேயில் தங்கியிருந்த போது வைரஸ் தொற்றுக்கு ஆளானதாகவும் டிசம்பர் ஒன்றாம் தேதி நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து போது covid-19 சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் தற்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விரைவில் குணமடைவார்கள்

விரைவில் குணமடைவார்கள்

ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள இரு வீராங்கனைகளும் தற்போது நலமுடன் உள்ளனர் எனவும் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்கள் குணம் அடைவார்கள் என மருத்துவர்கள் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜாவித் மாலேக் கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+