ட்ரம்ப்-கிம் சந்திப்பில் முக்கிய பங்கு வகித்த சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள் பாலகிருஷ்ணன், சண்முகம்!
ட்ரம்ப்-கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தனர் சிங்கப்பூர் அமைச்சர்களாக இருக்கும் தமிழர்களான பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகம்.
Recommended Video

சிங்கப்பூர்: உலக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களாக இருக்கும் தமிழர்களான டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் மிக முக்கிய பங்கு வகித்தனர்.

அமெரிக்காவும் வடகொரியாவும் கீரியும் பாம்புமாக சீறிக் கொண்டிருக்கும் நாடுகள். இந்த இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை நடத்தி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இந்த இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சட்டம், உள்துறை அமைச்சராக இருக்கும் சண்முகம் எனும் இரு தமிழர்கள்தான்.

மருத்துவம் படித்த பின்னர் அரசியலுக்கு வந்தார் டாக்டர் பாலகிருஷ்ணன். ட்ரம்ப்-கிம் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் பாலகிருஷ்ணன், இரு தலைவர்களது சந்திப்பு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். அனைத்தும் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வடகொரியா அதிபர் கிம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறார் என நம்புகிறேன் என்றார். மேலும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ட்ரம்ப், கிம் ஆகியோரை வரவேற்றது, இருவரது சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது உள்ளிட்ட விவரங்களை இருவருமே அப்டேட் செய்தும் வருகின்றனர்.
-
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்?












Click it and Unblock the Notifications