ஏமன் உள்நாட்டு கலவரத்தில் சிக்கி 2 தமிழர்கள் பலி
சென்னை: ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில், சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில் நடந்த சண்டையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் நாட்டில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஹவுதி கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடை பெற்று வருகிறது. இதில் இருதரப்பினரும் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் அதன் கூட்டு படையினரும் களம் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு இயல்பு நிலை திரும்பி இருந்தது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில், ஏமன் படையினரும், கிளர்ச்சியாளர்களும் இடையே கடுமையாக சண்டை நடைபெற்றது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சண்டையில், இதுவரை 75 பேர் வரை பலியாகி இருக்கின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் முகமது, கள்ளக் குறிச்சியை சேர்ந்த அந்தோணி ஆகியோர் பலியாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து இருவரது உடல்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி ஒன்றியம் பிச்சாவலசை கிராமத்தை சேர்ந்த முகமது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பே சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற அவர் ஏமன் நாட்டின் எல்லையோர நகரமான நஜ்ரனில் தங்கி வேலை செய்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் தான் சொந்த ஊருக்கு வந்து திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில்தான் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா இடையே நடந்த குண்டு வீச்சில் முகமது பலியாகி இருக்கிறார். முகமதுவுக்கு பரக்கத் நிஷா என்ற மனைவியும், வாஜித் என்ற மகனும், அஸ்மத் என்ற மகளும் உள்ளனர்.
குண்டு வீச்சில் பலியான கள்ளக்குறிச்சியை சேர்ந்த அந்தோணி பற்றிய முழு விவரம் தெரியவில்லை. போலீசார் அந்தோணி பற்றி அறிய விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான 2 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications