சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு
தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கைகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்தன.
சியார்கோவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தீவில் கரையைக் கடந்தது ராய் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 175 கிமீ (110 மைல்) வேகத்தில் காற்று வீசியது.
சியர்கோவின் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. 1.3 கோடி மக்கள் சூறாவளியால் பாதிக்கப்படலாம் என்று ஐ.நா. கூறியுள்ளது.
- சென்னை வெள்ளம்: பாதிப்புகளை காட்டும் படங்கள்
- தமிழ்நாடு மழை: சடங்காகிறதா மத்திய குழு ஆய்வு? கேட்பது 100 கிடைப்பது 10 - விரிவான அலசல்
புயல் தாக்கம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸை இந்த ஆண்டில் தாக்கியிருக்கும் சக்திவாய்ந்த புயல்களுள் ஒன்று ராய்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கூட்டமைபின் (IFRC) உள்ளூர் தலைவர் ஆல்பர்டோ பொகனெக்ரா கூறுகையில், "இந்த அசுரப் புயல் ஒரு சரக்கு ரயிலைப் போல கடலோர மக்களைத் தாக்கும் வகையில் பயமுறுத்துகிறது" என்றார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், கடற்கரைப் பகுதிகளில் இருந்து குடும்பங்களை வெளியேற்ற பிலிப்பின்ஸ் கடலோர காவல்படை உதவுவதைக் காட்டுகின்றன.
புயல் கடுமையாகத் தாக்கியிருந்தாலும், இதுவரை உயிரிழப்பு அல்லது காயம் பற்றிய தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த புயல்கள் அடிக்கடித் தாக்குவது வழக்கம். ஆண்டுக்கு சராசரியாக 20 புயல்கள் பிலிப்பின்ஸை தாக்குகின்றன.
2020 நவம்பரில் கோனி என்ற சூப்பர் புயல் பெரும் உயிரிழப்பையும் பேரழிவையும் ஏற்படுத்தியது. 2013இல் ஹையான் புயல் 6,000 க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்தது. அதன் பிறகு நாட்டைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல் கோனியாகும்.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
- மீண்டும் சிறைக்கு செல்வதை தவிர்க்க ஒரு கொலை - சிக்கிய உ.பி கைதி
- பருவநிலை மாற்றம்: ஜப்பானில் நிலக்கரிக்கு மாற்றாகிறதா நீல ஹைட்ரஜன்?
- மனித உரிமை மீறல்: 2 இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்
















Click it and Unblock the Notifications