துப்பாக்கியுடன் மர்ம நபர் ஊடுருவல்.. ஜப்பானில் அமெரிக்க கடற்படைத் தளம் மூடல்!
மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததால் ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் அதிரடியாக மூடப்பட்டுளளது.
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்படை தளம் மூடப்பட்டுள்ளது. தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள அமெரிக்க கடற்படையினர், உள்ளே புகுந்துள்ள அந்த மர்ம நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்படைத்தளம் உள்ள பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்றதையடுத்து அமெரிக்கா அங்கு தனது கடற்படை தளத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications