அபாய எல்லையை தாண்டுறீங்க.. இஸ்ரேலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை! மத்திய கிழக்கில் எகிறும் டென்ஷன்
துபாய்: (இஸ்ரேலை எச்சரித்த ஐக்கிய அரபு அமீரகம் UAE warns Israel) ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம் ரெட்லைன் (அபாய எல்லை) தாண்டும் நடவடிக்கை என்றும், பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இயல்பாக்கிய ஆபிரகாம் ஒப்பந்தத்தை சிறுமைப்படுத்தும் செயல் என்றும் இஸ்ரேலை ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுப்பாட்டில் வைத்து இருந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் நீண்ட காலம் மோதல் நீடித்து வந்தது. இந்த மோதலின் உச்சமாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு, இஸ்ரேலியர்கள் பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் காசா நகர் மீது போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை இந்த போர் தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவித்தது. இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றாலும், அதில் தற்போது வரை முடிவு எட்டப்பட்டவில்லை. போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இஸ்ரேலிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, காசாவை முழுமையாக கைப்பற்றி இணைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். நேற்று இரவு காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, ஆக்கிரமிப்பு மேற்கு கரையை இணைக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆபிரகாம் உடன்படிக்கையை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த முடிவு அமையும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரியான லானா நுஸைபே கூறியதாவது:-
சாவு மணி அடிப்பதாக இருக்கும்
"மேற்கு கரையை இணைக்கும் நடவடிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு தீர்வுக்கான முயற்சிக்கு சாவு மணி அடிப்பதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளையில், இஸ்ரேலிய அரசு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேற்கு கரையில் ஐந்தில் நான்கு பகுதிகளை இணைக்கும் அறிவிப்பை தீவிர வலதுசாரியாக கருதப்படும் இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெஜலேல் ஸ்மோட்ரிச் வெளியிட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம்
காசா-இஸ்ரேல் மோதலில் மத்திய கிழக்கில் செல்வாக்கு மிக்க ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலை எச்சரித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நேரடி எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications