பிச்சை எடுக்க தானே வர்றீங்க? பாகிஸ்தானுக்கு மற்றொரு அவமானம்! நாட்டில் கால் வைக்கவே தடை போட்ட அமீரகம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கி அவமானப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு மற்றொரு பெரிய அடியாக அந்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் விசா கொடுக்க மாட்டோம் என ஐக்கிய அமீரகம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வருவோர் பிச்சை எடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களைச் செய்வதாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே மோசாக இருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கு விலைவாசி உயர்வு, பொருளாதார சிக்கல், அரசியல் குழப்பம் எனத் திரும்பிய பக்கமெல்லாம் குழப்பமான ஒரு சூழலே இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்கிறார்கள்.

ஐக்கிய அமீரகம்
அப்படி பாகிஸ்தானியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அமீரகம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் பாகிஸ்தானுக்குச் செல்கிறார்கள். இதற்கிடையே இப்போது திடீரென ஐக்கிய அமீரகம் பாகிஸ்தான் குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.. பாகிஸ்தானியர்கள் ஐக்கிய அமீரகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகச் சொல்லி அமீரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அதேநேரம் பாகிஸ்தானுக்கு இதுபோன்ற தடைகள் விதிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே பல மத்திய கிழக்கு நாடுகள் பாகிஸ்தான் நாட்டினருக்குத் தடை விதித்துள்ளன. பாகிஸ்தான் நாட்டினர் தங்கள் நாடுகளுக்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் பிச்சை எடுப்பதாகவும் சொல்லி இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. பாகிஸ்தான் நாட்டினர் போதைப்பொருள் மற்றும் ஆள்கடத்தல் செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
என்ன காரணம்
அதாவது பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுற்று விசா கோரி விண்ணப்பித்து இவர்கள் ஐக்கிய அமீரகத்தில் நுழைந்துவிடுகிறார்கள். இருப்பினும், அதன் பிறகு இவர்கள் பிச்சை எடுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்களாம். இப்படி சுற்றுலா விசாக்களில் வருபவர்கள் பிச்சையெடுப்பதாலேயே ஐக்கிய அமீரகம் விசா கோரிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், இந்தத் தடையை இனி வரும் காலங்களில் நீக்குவது கடினம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சல்மான் சௌத்ரி கூறியுள்ளார்..
சுற்றுலா விசா
இப்போது பாகிஸ்தான் நாட்டவருக்குச் சுற்றுலா விசா எதுவும் வழங்கப்படுவதில்லை. அதிகாரப்பூர்வ மற்றும் தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படுகிறது.. அப்படி இல்லை என்றால் பல விண்ணப்பங்கள் மற்றும் கடுமையான தேர்வு பிராசஸுக்கு பிறகே சில பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் விசா கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
மொத்தமாகத் தடை
ஏற்கனவே விசா கோரி விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் போலீசார் கேரக்டர் சட்டிபிக்கேட் வழங்க வேண்டும் என வளைகுடா நாடுகள் அறிவித்திருந்தன. இருப்பினும், பலரும் மோசடியாக இந்த சான்றிதழைப் பெற்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இதையடுத்தே ஐக்கிய அமீரகம் மொத்தமாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல விண்ணப்பிக்கிறார்கள். வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகம் செல்கிறார்கள். இருப்பினும், இப்போது விசாவுக்கு மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இனி பாகிஸ்தானியர்களால் எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கும்
குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது, பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த விசா தடை விதிக்கப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications