உலகமே திரும்பி பார்க்க கூடிய திட்டத்தை நோக்கி நகரும் அரபு நாடு.. ஒவ்வொரு நாடும் இத பாத்து கத்துக்ணும்!

Subscribe to Oneindia Tamil

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை (Environmental Sustainability) நோக்கிய பாராட்டத்தக்கக் கூடிய நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரக அரசு முன்னெடுத்து வருகின்றது. இதற்கான மாநாடே துபாயில் 'சிஓபி 28' (COP28) எனும் பெயரில் தொடங்கியது. இந்த மாநாட்டில் இரண்டு முக்கியமான திட்டங்களை அது வெளியிட்டு இருக்கின்றது.

ஆன் ட்ராக் 2.0 மற்றும் சாலை 2.0 ஆகியவையே அந்த திட்டங்கள் ஆகும். 2050 ஆம் ஆண்டிற்குள் ஐக்கிய அரபு அமீரகத்தை பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வுக் கொண்டதாக மாற்றுவதே இந்த திட்டங்களின் முதல் இலக்காகும். மேலும், இந்த திட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிலையான எதிர்காலத்தை வளர்ப்பதில் அந்நாடு கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

"ஆன் ட்ராக் 2.0" மூலம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்: இது ஓர் புதுமையான காலநிலை டேஷ்போர்டு ஆகும். இந்த தளம் முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்களின் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் உறுதிமொழிகளை நோக்கி எவ்வாறு விடாமுயற்சியுடன் செயல்படுகின்றன என்பதை இது வெளிப்படையாகக் காட்டும்.

ஆன் ட்ராக் 2.0, வெளிப்படைத்தன்மையின் கலாச்சாரத்தை வளர்ப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களிடையே கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே நிகர-பூஜ்ஜிய பசுமை இல்ல வாயு உமிழ்வு இலக்கை ஐக்கிய அரபு அமீரகத்தால் எட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தங்கள் சாதனைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஆன் ட்ராக் 2.0 நிறுவனங்களுக்கு உதவுகின்றது. இது நாட்டின் காலநிலை நடவடிக்கை பயணத்தின் மாறும் கதையை உருவாக்குகிறது.

"சாலை 2.0" போக்குவரத்தை புரட்சிகரமாக்குகிறது: இதுவே இரண்டாவது முன்முயற்சி ஆகும். இந்த திட்டம் போக்குவரத்துத் துறையில் காணப்படும் மாசு உமிழ்வை பூஜ்ஜியமாக்குவதற்கானதாகும். இதற்காக நாடு முழுவதும் பூஜ்ஜிய உமிழ்வு வசதிக் கொண்ட, அதாவது, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை நோக்கி நகர்த்த அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக உமிழ்வில்லா போக்குவரத்தைக் கொண்ட நாடாக மாற்ற முடியும் என அது நம்புகின்றது.

தனிநபர் பயன்பாடு மட்டுமின்றி வணிக ரீதியான பயன்பாட்டிலும் மின்சார வாகனங்களே ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. இந்த தொலைநோக்கு முன்முயற்சிக்கு ஆதரவாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் உள்ளது. இதுதவிர, தலாபத் மற்றும் யுனிலீவர் வளைகுடா போன்ற முக்கிய நிறுவனங்களும் ஆதரவாக இந்த விஷயத்தில் உதவ இருக்கின்றது. எனவே, அரசாங்கம் மற்றும் தனியார் துறைக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் அமைக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், இந்த செயல் திட்டத்திற்காக UACA இரண்டு டிஜிட்டல் தளங்களை உருவாக்கியுள்ளது. "ஆன் ட்ராக் 2.0" மற்றும் "eMission" என்கிற தளத்தையே அது தயார் செய்திருக்கின்றது. நிறுவனங்களுக்கு அவற்றின் கார்பன் தடயங்களை துல்லியமாக அளவிடுவதற்கும், கணக்கிடுவதற்கும் இவை உதவும். இந்த கருவிகள் அதன் டி-கார்பனைசேஷன் உத்திகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் அவசியமானவை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.

யுஏசிஏ (UACA) வளர்ந்து வரும் கூட்டணி: சிஓபி27 இன் தொடக்கத்தில் இருந்தே இந்த கூட்டணி உள்ளது. மேலும், இது ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை தற்போது கண்டுள்ளது. இப்போது சிஓபி28 இல் 50 உறுப்பினர்கள் வரை இணைந்திருக்கின்றனர். இந்த சிஓபி குழுவில் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், உள்ளூர் நகராட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் இன்னும் பல அமைப்பினர் இணைந்துள்ளனர். காலநிலை மாற்றத்திற்கு எதிராக அணியை திரட்டுவதில் செல்வாக்குமிக்க கூட்டணியை இந்த யுஏசிஏ கொண்டிருக்கின்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் மற்றும் யுஏசிஏ-இன் முன்முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள காலநிலை நடவடிக்கைக்கு ஒரு அளவுகோலை அமைக்கவும் தயாராக உள்ளன. பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி உடன் சேர்த்து சுற்றுச்சூழல் நோக்கங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், ஐக்கிய அரபு சிறந்த எதிர்காலத்திற்கான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. நாட்டின் தொலைநோக்கு மற்றும் முயற்சிகள், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சர்வதேச சமூகத்தின் போராட்டத்தில் ஒரு முன்னணி பங்கை வகிக்கும் அர்ப்பணிப்பை விளக்குகிறது. இது பசுமையான, தூய்மையான உலகத்திற்கு வழி வகுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+