கலிபோர்னியா பல்கலையில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது இந்திய வம்சாவளி அமெரிக்கர் !
லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். விசாரணையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும், பல்கலைக் கழக பேராசிரியரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்தியாவில் கராக்பூர் ஐ.ஐ.டி.யில் 2000-ம் ஆண்டு படித்த மாணிக்சர்க்கார் (38) என்ற இந்திய வம்சாவளி அமெரிக்கர் தான் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த வில்லியம் க்ளக் (39) என்ற பேராசிரியருடன் மாணிக்சர்க்காருக்கு முன்விரோதம் இருந்ததாகவும் அதன் காரணமாக மாணிக்சர்க்கார், திட்டமிட்டு பேராசிரியரை கொல்ல நேற்று பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் எனவும் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications