கடைசி நபரை அனுப்பும் வரை.. வெளியேற மாட்டேன்.. காபூலிலேயே தங்கிய "யுகே" தூதர்.. சிலிர்க்க வைத்த கதை!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து பொது மக்களும், நிர்வாகிகளும், தூதரக அதிகாரிகளும் வெளியேறி வரும் நிலையில் யுகே தூதர் சர் லாவ்ரி பிரிஸ்டோ மட்டுமே அங்கிருந்து வெளியேறாமல் தூதரகத்திலேயே தங்கி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் இந்த முடிவிற்கு பின் சிலிர்க்க வைக்கும் காரணம் உள்ளது.

கடந்த ஞாயிறு பிற்பகல்.. காபூல் எல்லைக்கு உள்ளே தாலிபான் படைகள் நுழைந்த நொடி... மொத்த காபூல் நகரமும் நெருப்பாக கனன்று கொண்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் கும்பல் கும்பலாக கூடி நின்றனர். வெயிட்டிங் ஹாலில் விமானத்திற்காக காத்திருந்த பெண்கள் பலர் தாலிபான்களின் வெற்றியை கேட்டதும் கண்ணீர்விட்டு கதற தொடங்கினர். மொத்த காபூல் நகரமும் கனன்று கொண்டு இருந்த அந்த நொடி ஆப்கான் அதிபராக இருந்த அஷ்ரப் கானியும் நாட்டை கைவிடும் முடிவை எடுத்தார்.

இனியும் இந்த மண்ணில் ரத்தம் சிந்த வேண்டாம் என்று கூறியவர்.. தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கினார். சில மணி நேரங்களே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். அதோடு பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதையும் உறுதி செய்து கொண்டார். தஜிகிஸ்தானுக்கு பல கோடி சொத்துக்களோடு இவர் ஹெலிகாப்டரில் தப்பி சென்றுவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதிபர்

அதிபர்

அதிபரே தப்பிவிட்டார் என்றதும் மக்களும் சாரை சாரையாக விமானங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார்கள். விமானத்திலேயே "புட் போர்ட்" அடிக்கும் அவலம் நேற்று காபூலில் நடந்தது. அமெரிக்க விமானப்படை விமானங்களில் ஆப்கான் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏற ஓடிய காட்சிகள் நெஞ்சை பதற வைத்தது. ஒவ்வொரு நாட்டு தூதரக அதிகாரிகளும், வெளிநாட்டு மக்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும், தங்களின் விமானம் வரும், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறலாம் என்று காபூலில் காத்து கிடந்தனர். மனித வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெயர்வு கடந்த 48 மணி நேரமாக காபூலில் நடந்து வருகிறது.

யுகே

யுகே

ஆப்கான் அதிபர்.. மக்கள்.. அதிகாரிகள்.. ஏன் ராணுவ வீரர்கள் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் போது ஒருவர் மட்டும் காபூலை விட்டு நான் இப்போதைக்கு வெளியேற மாட்டேன் என்று அங்கேயே தங்கிவிட்டார். அவர்தான் ஆப்கானிஸ்தானுக்கான யுகே தூதர் சர் லாவ்ரி பிரிஸ்டோ! ஆப்கானிஸ்தானில் உள்ளே ஒவ்வொரு நாட்டு தூதரகமும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. முதலில் தூதரக அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், முக்கிய ஆவணங்கள், பொது மக்கள் என்று வரிசைப்படி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

யுகே மக்கள்

யுகே மக்கள்

இதேபோல் யுகே தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதற்காக சிறப்பு விமானம் காபூலுக்கு நேற்று முதல் நாள் இரவு வந்தது. தூதரக அதிகாரிகளையும், பொது மக்களையும் ஏற்றிக்கொண்டு இந்த விமானம் புறப்படுவதாக இருந்தது. யுகே தூதர் சர் லாவ்ரி பிரிஸ்டோ முக்கியமானவர் என்பதால் அவரையும் மீட்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. விமானமும் காபூலில் இருந்தும் புறப்பட தயாரானது. விமான நிலையில் இருந்து யுகே மக்களை வரிசையாக ஏற்றிக்கொண்டு இருந்தார் சர் லாவ்ரி பிரிஸ்டோ.. எல்லோரும் ஏறிய பின் யுகே மீட்பு விமான அதிகாரிகள்.. சார் நீங்கள் இப்போது ஏறலாம் என்று சர் லாவ்ரி பிரிஸ்டோவிடம் கூறினார்கள். இதை கேட்ட சர் லாவ்ரி பிரிஸ்டோ.. இல்லை நீங்கள் செல்லுங்கள்.. இன்னும் பல யுகே குடி மகன்கள் இங்கே இருக்கிறார்கள். எல்லோரும் காபூலில் இருந்து வெளியேறட்டும்.

பலர்

பலர்

கடைசி நபர் வெளியேறும் வரை நான் இங்குதான் இருப்பேன். நான் காபூலுக்கான யுகே தூதர். காபூலில் உள்ள யுகே மக்களை பாதுகாப்பதும், வழி நடத்துவதும்தான் என்னுடைய பணி என்று கூறி.. அந்த விமானத்தில் ஏற மறுத்தார். அதில் இருந்து கடந்த 48 மணி நேரமாக யுகேவிலேயே தங்கி தன் நாட்டு குடிமகன்களை மீட்கும் பணியை இவர் திறம்பட செய்து வருகிறார்.கணக்குப்படி பிரிட்டிஷ் மக்கள், யுகே செல்ல தகுதியான ஆப்கான் மக்கள் என்று இன்னும் 4000 பேர் காபூலில் சிக்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் யுகே தூதரகத்தை நம்பித்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

Recommended Video

    ஆப்கனிலிருந்து தமிழர்களின் அபய குரல்.. மத்திய அரசு உடனே உதவ உருக்கமான கோரிக்கை
    யாரை மீட்க வேண்டும்

    யாரை மீட்க வேண்டும்

    இவர்கள் எல்லோரையும் மீட்க வேண்டும் என்றுதான் கடுமையாக சர் லாவ்ரி பிரிஸ்டோ உழைத்து வருகிறார். இந்த 4000 பேரையும் வெளியேற்றிய பின்தான் கடைசி நபராக வெளியேறுவேன் என்பதில் சர் லாவ்ரி பிரிஸ்டோ உறுதியாக இருக்கிறார். இவரின் இந்த செயல் காரணமாக மொத்த யுகே குடி மக்களும் ஹீரோ போல பார்த்து கொண்டாடி வருகிறார்கள். தாலிபான்களின் நெருக்கடிக்கு இடையில் தங்கள் காக்கும் ரட்சகனாக இவரை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ஜெர்மனியில் நாஜி படைகளிடம் இருந்து யூதர்களை ஸ்கிண்ட்லர் என்று நபர் தனியாளாக காப்பாற்றும் கதையை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் "ஸ்கிண்ட்லர்ஸ் லிஸ்ட்" என்று படமாக எடுத்து இருந்தார். உலக அளவில் புகழ்பெற்ற இந்த படத்தில்.. யூதர்களை கஷ்டப்பட்டு ஒவ்வொருவராக ஸ்கிண்ட்லர் காப்பாற்றுவார்.. அந்த படத்தில் நடத்த விஷயங்களைதான் தற்போது சர் லாவ்ரி பிரிஸ்டோ நிஜத்தில் செய்து வருகிறார்.

    நிஜம்

    நிஜம்

    நிஜ உலகின் ஸ்கிண்ட்லர் இவர்தான். அந்த படத்தில் "உங்களால் பல தலைமுறைகள் வாழப்போகிறது.. பல தலைமுறைகள் காப்பாற்றப்பட போகிறது" என்று ஒரு வசனம் வந்திருக்கும். நிஜத்தில் பல பிரிட்டிஷ் தலைமுறைகளை காப்பாற்றும் பொறுப்பை சர் லாவ்ரி பிரிஸ்டோ முன்னின்று நடத்தி வருகிறார். ஆப்கானை விட்டு அதிபர் அஷ்ரப் கானி, ராணுவ வீரர்கள், ஆப்கான் மக்கள் என்று எல்லோரும் வெளியேறிய போதும் ஒற்றை ஆளாக தன் நாட்டு மக்களை காப்பதற்காக இவர் காபூலிலேயே தூண் போல உறுதியாக நின்று கொண்டு இருக்கிறார்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+