கொள்ளையடித்த வீட்டில் குட்டித் தூக்கம்... போலீசில் சிக்கிய திருடனுக்கு 18 மாத சிறை
லண்டன்: கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் களைப்பில் சிறிது நேரம் படுத்துத் தூங்கியதால் திருடன் ஒருவன் போலீசில் சிக்கிய வேடிக்கையான சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது.
பிரான்கி பிலானிகன் என்ற 22 வயது திருடன் ஒருவன் இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் போர்ட்சையர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் திருடச் சென்றுள்ளான். அங்கிருந்த பொருட்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டிய பிரான்கி, திருடிய களைப்பில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள நினைத்துள்ளான்.
அந்த வீட்டின் படுக்கையறையில் கட்டிலில் படுத்த பிரான்கி, தன்னையறியாமல் அயர்ந்து தூங்கி விட்டான். இதற்கிடையே வீட்டிற்குத் திரும்பிய அதன் உரிமையாளர், வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
படுக்கையறையில் திருடன் ஒருவன் உறங்குவதைக் கண்டதும், உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே விரைந்து வந்த போலீசார் தூங்கிய கொள்ளையனை தட்டி எழுப்பி அவனைக் கைது செய்தனர்.
பிரான்கி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவனுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications