சார்லஸ் குழுமத்தின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு, இங்கிலாந்து நாடாளுமன்றம் உயரிய விருது!
லண்டன்: குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு, மற்றும் லாப நோக்கம் இல்லாத மனிதாபிமான உணர்வுடன் வணிகங்களை உருவாக்கியதற்காக, சார்லஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் 'கார்டியன் ஆஃப் ஏஞ்சல்ஸ்' எனும் உயரிய விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.
விருதை பெற்ற அவர், "காமன்ஸ் அவையில் (House of Commons), இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 'கார்டியன் ஆஃப் ஏஞ்சல்ஸ் விருது' பெற்றதில் பெருமையும் பணிவும் அடைகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும், "நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜார்ஜ் ஸ்மூட் மற்றும் ஆப்பிங்டன் தொகுதி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் பேக்கன் ஆகியோர் வழங்கிய இந்த விருது, குழந்தைகள் நலன், சமூக மேம்பாடு மற்றும் இரக்க உணர்வுடன் வணிகங்களை உருவாக்குவதற்கான எங்களின் செயல்பாட்டை கொண்டாடுகிறது" என்றும் தெரிவித்திருக்கிறார்.
லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், சமூகப் பொறுப்புணர்வுடனும், மனிதநேயத்துடனும் வணிகங்களை நடத்தியதால் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.
"சார்லஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, இந்த விருது தலைமைத்துவம் என்பது வெறும் தொழில்முனைப்பு மட்டுமல்ல - இரக்கம், செயல் மற்றும் தலைமுறைகள் தாண்டியும் தாக்கம் ஏற்படுத்துவது என்பதற்கான எனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எனது பயணத்தை தொடர்ந்து ஆதரிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்றும் மார்ட்டின் கூறியுள்ளார்.
விருது பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 'லாட்டரி கிங்' சான்டியாகோ மார்ட்டினின் மூத்த மகன் ஆவார். இவர் மார்ட்டின் குழுமத்தின் இயக்குனராகவும், மீடியா, கட்டுமானம், விருந்தோம்பல், ரயில்வே மற்றும் விளையாட்டு என பல்வேறு வணிகத் துறைகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் 'சவுத் ஸ்டார் ரயில்' என்ற இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை வழங்குநராகவும் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications