16 வயது மாணவியிடம் காமுக செயலில் ஈடுபட்ட ஆசிரியர்... நடுவில் தாயார் வந்ததால் சிக்கினார்!
லண்டன்: மாணவி வீட்டுக்கு பாடம் சொல்லித் தருவதற்காக வந்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்டார். அந்த சமயம் பார்த்து மாணவியின் தாயார் வந்து விட்டதால் ஆசிரியர் கையும் களவுமாக சிக்கினார்.
சம்பந்தப்பட்ட மாணவிக்கு வயது 16. ஆசிரியருக்கோ 35 வயதாகிறது. தற்போது அந்த ஆசிரியருக்கு கோர்ட், 14 மாத சிறைத் தண்டனை அளித்துள்ளது. மேலும் அவரை 2 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுபோக அவரை சமூக சேவையில் ஈடுபடுமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆசிரியர் சில காலமாகவே அந்த மாணவியை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். அடிக்கடி அவரது வீட்டுக்கே போய் உல்லாசமாக இருந்துள்ளார். மாணவியும் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார்.
சம்பவத்தன்றும் அந்த மாணவி தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்தார் ஆசிரியர். வழக்கம் போல மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயம் பார்த்து மாணவியின் தாயார் வீடு திரும்பியுள்ளார். கதவைத் திறந்த மகள் அலங்கோலமாக இருப்பதைப் பார்த்த தாயார் என்ன என்று விசாரித்துள்ளார்.
மகள் சரியாக பதிலளிக்கவில்லை. பயத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த தாயார், படுக்கை அறைக்குப் போனார். அங்கு கதவோரமாக ஆண்கள் அணியும் ஷூ இருப்பதைப் பார்த்தார். கதவை மெதுவாக திறந்து பார்த்த அவர்
அங்கு ஆசிரியர் ஒண்டியபடி பதுங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகுதான் நடந்தது குறித்து தாயாருக்குத் தெரிய வந்தது. அவர் அதிர்ந்து போனார். உடனே தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் போலீஸில் புகார் தரப்பட்டது. ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. மைனர் சிறுமியை மோசடியான வார்த்தைகளால் ஏமாற்றி தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரை 2 வருடம் சஸ்பெண்ட் செய்யவும் கோர்ட் உத்தரவிட்டது.
ஆசிரியர் 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்றும் கோர்ட் அறிவித்தது. இதுதவிர 200 மணி நேரம் அவர் சமூக சேவையில் ஈடுபடுமாறும் கோர்ட் பணித்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications