‘தங்க மீனை’த் தாக்கிய பூனைக்குட்டியை மைக்ரோவேவில் வேக வைத்த லண்டன் பெண்
லண்டன்: தான் ஆசையாக வளர்த்த தங்கமீன்களைத் தாக்கியக் குற்றத்திற்காக பூனைக்குட்டி ஒன்றை மைக்ரோவேவில் வேக வைத்து கொலை செய்துள்ளார் லண்டன் பெண் ஒருவர்.
லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோய்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் குன்லிஃபி என்ற 23 வயது இளம்பெண். இவர் தனது வீட்டில் தங்க மீன்கள் மற்றும் பிறந்து நான்கு மாத காலமே ஆன மௌஃக்லி என்ற பூனைக் குட்டியை வளர்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று பூனைக்குட்டி தங்கமீன்கள் வைத்திருந்த கண்ணாடி தொட்டியைத் தாக்கியுள்ளது. இதனால் மீன்தொட்டி கீழே விழுந்து தங்கமீன்கள் காயமடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த குன்லிஃபி, பூனைக் குட்டியைத் தண்டிக்கும் விதமாக அதனை மைக்ரோவேவ்வில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்துள்ளார்.
இதனால் பூனைக்குட்டியின் உடல் பாகங்கள் வெந்து போயுள்ளது. மைக்ரோவேவிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பூனைக்குட்டி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பூனைக்குட்டியை மைக்ரோவேவில் வைத்து கொலை செய்த தகவல் அறிந்த பிராணிகள் வதை தடுப்பு அமைப்பினர் குன்லிஃபி மீது வழக்குத் தொடுத்துள்ளனர். அடுத்தமாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுவதாக அந்நாட்டுப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications