திடீர் திருப்பம்! ரஷ்ய அதிபரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.. சமாதான முயற்சியா?
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2ஆவது நாளாகத் தொடும் நிலையில், திடீர் திருப்பமாக ரஷ்ய அதிபர் புதினை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்றைய தினம் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. முதலில் வான்வழித் தாக்குதலையும் அதைத் தொடர்ந்து பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மூலமும் ரஷ்யா தனது தாக்குதலை நடத்தியது.
போரின் முதல் நாள் வெற்றிகரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம், முதல் நாளில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அழித்ததாகத் தகவல் அறிவித்தது.

உக்ரைன் போர்
இந்நிலையில், இன்றைய தினம் போர் 2ஆவது நாளாகத் தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனில் கைப்பற்றிய இடங்களில் உள்ள அரசு கட்டிடங்களில் ரஷ்யா தனது நாட்டுக் கொடியைப் பரக்கவிட்டுள்ளது. இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் கிழக்குப் பகுதியில் இருந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

தலைநகர் கீவ்
உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றிவிட்டால், கிட்டதட்ட நாடே கட்டுப்பாட்டில் வந்ததைப் போலத் தான் என்பதால் விரைவாகத் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், சீனா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளும் உக்ரைன் உடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தன.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
இதனிடையே உக்ரைன் ராணுவம் போரிடுவதை நிறுத்திய உடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவித்து இருந்தார். உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். உக்ரைன் நாட்டில் 2ஆவது நாளாக இன்றும் போர் தொடரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Recommended Video

அதிபர் வேதனை
முன்னதாக, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டதாக வேதனை தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, என்ன நடந்தாலும் தலைநகர் கீவ்-ஐ விட்டு வெளியேற மாட்டேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். மேலும், ரஷ்யாவை எதிர்த்துப் போராட, போரில் அனுபவம் கொண்ட ஐரோப்பியர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications