உக்ரைன்: ராணுவ விமானத்தை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் 49 வீரர்கள் பலி
லுகான்ஸ்க்: உக்ரைனில் ராணுவ விமானமொன்றை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 49 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவது தொடர்பாக கடந்தாண்டு அங்கு பிரச்சினை வெடித்தது. உக்ரைனின் கிழக்குப் பகுதியான கிரிமியா உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பிற்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. அதுபோல் இன்னும் சில கிழக்குப் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நகரங்களில் ஒன்றான லுகான்ஸில், விமான நிலையத்தை தங்களின் வசம் வைத்துக் கொண்டுள்ளது உக்ரைன் அரசு. மேலும், போர்ப் பணியில் இருக்கும் அரசு துருப்புகளை சுழற்சி முறையில் மாற்றி விட இந்த நிலையத்தைப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில், இன்று அதிகாலை 40 படை வீரர்களையும், ஒன்பது ஊழியர்களும் கொண்ட உக்ரைன் அரசு ராணுவ விமானம் ஒன்று லுகான்ஸ்க் விமான நிலையத்தை நோக்கி வந்தது. அப்போது அவ்விமானத்தின் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே பலியாகிவிட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் செய்தித் தொடர்பாளரான விளாடிஸ்லாவ் செலிஸ்நியோவ் உறுதி செய்துள்ளார்.
நேற்று போராளிகளின் ஆதிக்கத்தில் இருந்த முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை அரசுத் துருப்புகள் கைப்பற்றின. இந்நிலையில், இன்று போராளிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் கடந்த இரண்டு மாத கலவரங்களில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 4,00,000 மக்கள் வசிக்கும் லுகான்ஸ்க் நகரில் இன்று காலை முதலே வெடிச்சத்தங்களும், கடும் சண்டை நடந்து கொண்டிருப்பதற்கான சத்தங்களும் கேட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications