நான்தான் பேசுவேன்.. சொன்ன மத்திய அமைச்சர்.. குறுக்கிட்ட ருமேனிய மேயர்

Subscribe to Oneindia Tamil

ருமேனியா: நான் தான் பேசுவேன் என்று கூறிய மத்திய அமைச்சருக்கு ருமேனிய மேயர் பதிலடி தந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வருவதால், அங்கிருக்கும் இந்திய மாணவர்வளை அண்டை நாடுகள் வழியாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இந்திய அரசு.

உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திர்களில் 3,726 பேரை இன்று ஒரே நாளில் மீட்க 19 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 உக்ரைனில் இந்தியர்கள்

உக்ரைனில் இந்தியர்கள்

உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவம் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு சென்றுள்ளார்கள். தற்போது உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

விமானம்

விமானம்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இதில் இந்திய விமானப்படையும் பங்கெடுத்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆபரேஷன் கங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது ருமேனியாவில் இருக்கிறார்.

 வாக்குவாதம்

வாக்குவாதம்

ருமேனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்திய மாணவர்கள் ருமேனிய மேயர் தலைமையில் தங்கி இருந்தனர். அப்போது, அந்த இடத்துக்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சென்றார். அந்தநிலையில், மாணவர்களிடம் இந்தியா எப்போது திரும்புவார்கள் என ருமேனியா மேயர் பேசி வந்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நான் தான் பேசுவேன் என்றும், நான் என்ன பேசுவேன் என்று நான் தான் முடிவெடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேயர்

மேயர்

இதற்கு ருமேனிய மேயர், இந்த மாணவர்களை நான் தான் பாதுகாத்தேன். அவர்களுக்கு தேவையான உணவு, உடை அனைத்தையும் தந்தேன். நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது என்று பதிலளித்தார். இதற்கு இந்திய மாணவர்கள் கைதட்டி பாராட்டுவார்கள். ருமேனிய மேயரைப் பாராட்டி, இந்திய அமைச்சர் தலைகுனிந்ததுபோன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+