For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உக்ரைன் அதிபருக்கு கொரோனா.. தனிமையிலிருந்து பணிகளை மேற்கொள்கிறார்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் நாட்டு அதிபர் ஜெனன்ஸ்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், பிரேசில் அதிபர் போல்சனேரோ, போலாந்து அதிபர் அண்ட்ரிஜ் டூடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பிறகு குணமடைந்தனர்.

Ukraines President contracts coronavirus

நமது நாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளிட்ட பல விஐபிகள் கொரோனா பாதித்து குணமடைந்தனர்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாததால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வைரஸ் பாதிப்பில் இருந்து கூடிய விரைவில் குணமடைந்து விடுவேன் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

12 வயது குழந்தைக்கும் பலன்.. அறிவித்த ஃபைசர்.. கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ரெடியாகும் இந்தியா12 வயது குழந்தைக்கும் பலன்.. அறிவித்த ஃபைசர்.. கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ரெடியாகும் இந்தியா

அதிபர் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அதிபராக வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ukrainian President Volodymyr Zelenskiy has tested positive for coronavirus, the presidential office said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X